பக்கம்:நித்தியமல்லி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


சுடர் ஆனந்தமாகப் புன்னகை செய்தாள். "ஆல்ை, இந்த உதயணன் இப்படி ஆனந்தரங்கத் தின் பிள்ளையாக இருப்பார்னு நான்துளிகூட நினைக்கலே அம்மா!' தமிழ்ச்சுடருக்குப் பொட்டில் அறை விழுந்தமாதிரி இருந்தது. மரகதத்தம்மை இடது கைப்பிடிப்பில் மடித்து வைத் திருந்த கடிதமொன்றைப் பிரித்து வைத்தபடி சிந்தனை அயில் லயித்தாள். அவளது முதுமை படித்த முகத்தில் வேர்வை வழித்ததை மாடிக்கூடத்து விளக்கு துல்லிய" மாக எடுத்துக் காட்டிற்று. அவள் பிரித்து வைத்த அக் கடிதத்தை மீண்டும் மடித்து வைத்துக் கொண்டபடி "சுடர், நான் இந்த நெக்லஸை திரும்ப ஆனந்தரங்கம் அவர்களிடமே திருப்பிக் கொடுத்திடப்போறேன் அம்மா' என்ருள். சொல்லிவிட்டு மகளை அர்த்தப் பொதிவுடன் பார்த்தாள். உங்கள் மன இஷ்டப்பிரகாரம் செஞ்சிட உங்க ருக்கு உரிமை இருக்கம்மா' என்ருள் தமிழ்ச்சுடர். மரகதத்தம்மை தன் மனத்துயர் அனைத்தையும் கணப்பொழுதில் மறந்துவிட்டவள் போன்று அமைதி யோடு சிரித்தாள். ரொம்பவும் வினயமாகப் பதில் சொல்லிட்டே, சுடர்! ஊம்!... என்னமோ எல்லாம். ஆண்டவர் சித்தப்படி நடக்கட்டும்! சரியம்மா, வா சாப்பிட அடடே, மணி எட்டு இருபது ஆயிடிச்சே! என்று பதறினுள் சுடரின் தாய். -

  • ஆகட்டும் அம்மா!”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/56&oldid=1277323" இலிருந்து மீள்விக்கப்பட்டது