பக்கம்:நித்தியமல்லி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மன ஆழி புயல் கடவில் மட்டும்தான் வீசுமா என்ன? மன ஆழியிலே எண்ணப் புயலும் வீசுவது உண் டல்லவா? மணி எட்டு நிமிஷம் முப்பது. தான் ஆவலுடன் கடந்த சில ஆண்டுகளாகக் கட்டி வந்த இன்பக் காதல் கோட்டை தனக்குத் தெரியும் வகையிலேயே ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது என் னும் துன்பத் தீர்ப்பை முன்கூட்டியே ஊகம் செய்தவ ளாக, அந்நினைவின் பயங்கரப் புயலில் சிக்கியவாறு சாப் பிட்டேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு உண்டு. எழுந்து கையலப்பினுள் தமிழ்ச்சுடர். கண்கள் கலங்கி வந்தன. அக்கலக்கத்தை உள்ளம் வாங்கிக் கொண்டது. எந்தவிதச் சலனமும் வெளிக்குத் தெரியாத வண்ணம்: நாகுக்காகத் தப்பித்துக் கொண்டாள் தமிழ்ச்சுடர். “என்னம்மா, சரியாச் சாப்பிடலையே அம்மா? உன் ைேட மனசு சரியில்லையா சுடர்? பெற்றதாயிடம் எதை யும் நீ எப்பவுமே மறைக்கப்படாதம்மா! என்க்கு நீ. தானம்மா சகலமும்!’ என்ருள் மரகதத்தம்மை. அவள் நா தழுதழுத்தது. - 'ரொம்பச் சாப்பிட்டால், அப்புறம் தூக்கம் வந்து, படிப்பு கெட்டுவிடும். பரீட்சை நெருங்குதில்லையா? அதான் அளவோடு சாப்பிட்டேன்! மற்றபடி உனக்குத் தெரியாமல் எனக்கென்னமா கவலையும் கஷ்டமும்?" -என்ருள் தமிழ்ச்சுடர். "சரி அம்மா போய்ப்படி அப்புறம் மாடிக்குப் பால் கொண்டு வர்றேன்!" 'ஆகட்டும் அம்மா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/57&oldid=786631" இலிருந்து மீள்விக்கப்பட்டது