பக்கம்:நித்தியமல்லி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


நடையில் மயங்கி நடந்த வண்ணம் தமிழ்ச்சுடர் மாடிப்படிகளைக் கடந்தாள். அவள் மாடியில் தன் அறை அயில் உட்கார்ந்திருப்பாள். அப்போது காரின் குழல் ஒலி வாசலில் கேட்டதை அறிந்தாள். வராந்தா'வில் வந்து நின்து எட்டிப் பார்த்தாள் கீழே. தெரு விளக்குக் கம்பத தில் நிலவின் வீச்சு வீழ்ந்து கிடந்தது. தெருவிளக்கின் ஒளி வாசலில் நெடுகிலும் படர்ந்து கிடந்தது. புதிதாகக் கார் ஒன்று வந்து நின்றது. காரைக் கண் டதும் உடனே அவளுக்கு உதயணன் ஞாபகம்தான் வந் திது. அவனுடைய இளநீல வர்ணக் காரா என்பதை நிர் -ணயம் செய்து கொள்ள முடியவில்லை அவளால். யாரோ இருவர் இறங்கி வந்ததை மட்டும் அவளால் காண முடிந் திது. தின் வீட்டுக்குள் நுழைந்ததையும் அவள் பார்த் தாள். புதிய பரபரப்புடன் அவள் மாடிப்படியில் உச்சித் தலைவில் வந்து நின்ருள். வலிய அவளாகக் கீழே இறங் கிச் செல்வது அவளுக்கு அத்துணை விவேகம் நிறைந்த செய்கையாகப் படவில்லை. எடுத்துக்கட்டி ஏதாவது சாக் குப் போக்குச் சொல்லிவிடலாம் அம்மாவிடம் என்ற நொண்டிக் காரணமும் அவளுக்குப் பளிச்சிடாமல் இல்லை. ஆனாலும், தன் அன்னை இம்மாதிரி நடப்புக் களிலே தன்னை மிகுந்த அக்கறையுடன் கண்காணிப்பாள் என்பதை நினைவிற்கொண்டு பேசாமல் பாடப் புத்தகங் களைச் சரண் அடைந்தாள் தமிழ்ச்சுடர். புத்தகங்களைப் பரப்பிவைத்தாள். இந்திய சரித்திரம், ஒதெல்லா. உரை நடைக் கோவை, பாலிடிக்ஸ் என்று வரிசை எண் நீண் டது. அதே தருணத்தில் உதயணனை முதன் முறையாகச் சந்தித்த நடப்பை மீண்டும் சிந்தனைக்குக் கொணர்ந் தாள். அந்நடப்பை ஒளிக்காமல் தன் அன்னையிடம்கூறிய நாணயமான போக்கையும் தனக்குத்தானே சிலாகித் துக் கொண்டாள். நீ கல்லூரிப் பெண், ஆண்பிள்ளை களோடு சர்வஜாக்கிரதையாகப் பழகவேணும் அம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/58&oldid=1277324" இலிருந்து மீள்விக்கப்பட்டது