பக்கம்:நித்தியமல்லி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


குடும்ப கெளரவத்தை நீ மறந்துவிடக்கூடாது. நாம் வாழ்ந்து கெட்டவர்கள்; என்ருலும், நம் குடும்ப கெளர வம் எப்போதுமே நிலைத்து நிற்கவேணும. நீ நாலும் தெரிந்த பெண். அது எனக்குத் தெரியும்! படிப்பு முடிந்: ததும்; உன் மனத்தைத் திறந்து என்கிட்டே நீ சொல். உன் நெஞ்சிலுள்ள இளைஞனே உனக்குக் கல்யாணம் -பண்ணி வைப்பேன். ஆனல் அந்த இளைஞன் என் மன சிலே நல்ல எண்ணத்தை உண்டாக்கியாக வேணுமம்மா!' பெண்ணுகப் பிறந்தவங்களுக்கு நம் தமிழ்ச் சமுதாயத் திலே எத்தனையோ கட்டுத்திட்டங்கள் இருக்குதே. அம்மா' என்று ஒரு சிற்றுரை'யே நிகழ்த்தி விட்டாளே மரகதத் தம்மை!. மேல்வசமாக இருந்த நூலைப்புரட்டினுள் தமிழ்ச் கடர். மாமன்னர் அசோகர் தோன்றினர். அசோகரின் கல்வெட்டுக்கள் பற்றிப் பரீசையில் கேட்பார்களென்று: எதிர்பார்த்தாள். அதற்கான முன்னுரையை சரித்திரப் பேராசிரியர் டிக்டேட்' செய்திருந்தார். சில இடங்களில் இடைவெளி வி ட் டி ருந் தாள் . நேற்றுமுன்தினம் அவற்றை உதயணனிடமிருந்து குறித்துக் கொண்டிருந்: தாள். இதே முன்னுரையோடு சத்திய நாதய்யரின் சில புதிய ஆராய்ச்சிக் குறிப்புக்களையும் கொடுத்திருந்தாள் அவள் தோழி ஸ்டெல்லா மேரி. இரண்டையும் வாய். விட்டுப் படித்தாள்: மனனம் செய்து கொள்ளும். அளவுக்கு அழுத்தம் கூட்டிப்படித்தாள்! - மாடிப்படியினைக் கடந்து வந்தாள் மரகதத்தம் மாள். கையில் பால் குவளை இருந்தது. "அம்மாசுடர். ஒருநிமிஷம்மா' என்று அனுமதி கோரிய பாங்கில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/59&oldid=1277325" இலிருந்து மீள்விக்கப்பட்டது