பக்கம்:நித்தியமல்லி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


    • Ersörestui Lorr?**

"பால் இருக்குதம்மா!' "சரியம்மா!' என்ருள் சுடர். வீட்டுக்கு வந்தவர்கள் யாராம்?-அவளுள் வின விசுவரூபம் எடுத்தது. பாலை ஆற்றி தம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள் தாய். மகள் குடித்தாள். சற்றுநேரம் கீழே வந்துவிட்டுப் போகிருயா கடர்?’’ . "ஆகட்டுமே!' தாயைத் தொடர்ந்தாள் புதல்வி. அழகு கொழிக் கும் மார்பகத்தின் சேலைப் பகுதி காற்றில் நழுவி விழுந் தது. அதை எடுத்துக் கொய்து போட்டுக் கொண்ட போது, அழகின் கம்பீரம் மிகுந்த மார்பகத்தின் தசை திரட்சியின் இனிய ஸ்பரிசககம் அவளை ஒரு கணம் கிறங்கச் செய்தது. ஏதேதோ இன்பலபிப்புடன் கிறக்கம் அடைந்த அவள், மறுவினடியில் மனத் தெளிவு பெற்று. மாடிப்படிகளைக் கடந்தாள். பாதச் சரங்கள் பவ்ய: மாகக் குழைந்தன. கூடத்தில் குழல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. எப்போதாவதுதான் குழல் விளக்குகளுக்கு வேலே வரும். இப்போதும் அதற்கு ஏதோ ஒரு முக்கிய காரணம் இருக்க வேண்டும். கூடத்தில் வந்து நின்றகுமாரி தமிழ்ச்சுடர் கூடத் தின் மையத்திலிருந்த பஞ்சனைச் சோபாக்களில் இரு உருவங்கள் தென்பட்டதைக் கண்டாள். உடனே முகத் தைச் சேலை நுனி கொண்டு துடைத்துக்கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/60&oldid=1277326" இலிருந்து மீள்விக்கப்பட்டது