பக்கம்:நித்தியமல்லி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


விஷயமாய் நான் இரண்டொருநாளிலே முடிவு சொல்ல. நேரிலே வருறேனுங்க. அதுக் குள்ளே எங்க சுட ரையும் கலந்து யோசிக்க அவகாசம் கிடைக்கும்னு நினைக்கிறேனுங்க, அண்ணு'. சஸ்பென்ஸ் வைத்து விளையாடிய அப் புதிருக்கு. விடை என்ன ? அந்த விடை மரகதத்தம்மைக்கு மட்டுந்: தான் அத்துபடியா? இல்லை, அவள் மகளுக்கும் அவ். விடையில் பங்கு உண்டா? அன்னையின் நியாயமான கண்டிப்பு குணம் பற்றி அவள் அறியாதவளா? 举 涤 翠 புதியதொரு திருப்பத்தில் தான் கொணர்ந்து நிறுத்தப்பட்ட உண்மை. இப்போது தமிழ்ச் சுடருக்கு தெள்ளத் தெளிவாகப் புரியத் தொடங்கிவிட்டது! அம்மாவின் பேச்சு சில மணிநேரத்துக்கு முன் உதிர்ந்த, விதத்திலிருந்து, ஆனந்தரங்கம் அளித்த பரிசைத் திருப்பிவிட்டு விடுவாள் என்பதை ஒரளவு ஊகித்திருந் தாள். அப்பரிசை ஏற்க மறுப்பதற்குத் தயாராக இருப்பதானது. அவள் ஆனந்தரங்கத்தரல் அடைந்த ஏமாற்றத்தையும் கசப்பையும் தோல்வியையும் இன்ன மும் அவள் மறந்துவிடவில்லை என்பதை காட்டுகிற, தென்பதையும் அவளால் கணிக்க முடிந்தது. ஆகவே தான், தன்னுடைய காதற்கோட்டை-உதயணனே நம்பிக் கட்டிய காதற்கோட்டை-உதயணனும் தானும் சேர்ந்து உருவாக்கிய காதற் கனவுக் கோட்டை தன்னை உணர்ந்த நிலைப்புடன் சரிந்து விழ வேளே பார்த்துக் கொண்டிருந்ததையும் அவள் உணர்ந்தாள். +. கண்கள் கலங்கி வந்தன. நீர்விளிம்பின் இரு. முனைப்பில் ஒன்றில் உதயணனும் இன்ருென்றில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/66&oldid=1277332" இலிருந்து மீள்விக்கப்பட்டது