பக்கம்:நித்தியமல்லி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


நீ முன் ஏற்கமறுத்த அதே வைரநெக்லஸ்ை இப்போது ஏற்றுக்கொள். இப்போது நீ மறுத் தால், என் ஆவி வேகாது. ஏனென்றல், என்னுள்ளே உன் நினவு நித்தியமல்லியாக அன்றிலிருந்து இன்றுவரை பணம் பரப்பி வருகிறது. இவ்வுண்மையை நீ நம்புவாயோ, என்னமோ? விதி, விதியாவது மண்ணுவது, நான் உன் வாழ்க்கையிலே விளயாடிவிட்டேன். என்னை மன் னி த் வி ட மு டி யா தா உன்னல்? அது உன்மையானல், இன்னொரு பேராசை டிம் எனக்கு உண்டு. அது, ன் மகன் உதய .ணனையும் உன் மகள் தமிழ்ச் சுடரைரும் நீ தம்பதியாக்கிவிடவேண்டுமென் ப து தா ன் . இந்தக் கனவும் நிறைவேறினல், என்னைப்பால யோக்கியவான் வேறு யார் உலகத்தில் இருக்க முடியும்? ஏ. எம். ஆனந்தரங்கம் உந்திக் கமலம் வெளிக் கொட்டிய பெருமூச்சுடன் அக்கடிதத்தை விரல் நடுங்க மடித்தபோது, அடிப் பகுதியில் ஏதோ மாறுபட்ட குறிப்பு தென்பட்டது. உன்னிப்பாகப் பார்வயிைட்டாள். - அம்மாவின் கையெழுத்தல்லவா? கவனித்தாள். "ஐயா! - என்னை மன்னித்துவிடுங்கள். - இப்படிக்கு, மரகதம் குணசீலன்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/68&oldid=1277334" இலிருந்து மீள்விக்கப்பட்டது