பக்கம்:நித்தியமல்லி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


ஜன்னலின் விளிம்புகளில் தொங்கவிடப்பட்டிருந்த கிளிப்பச்சைத் திரைகளை ஊடுருவிப் படர்ந்தது சூரிய வெளிச்சம், மணிபத்து. தமிழ்ச்சுடர் கல்லூரிக்குப் புறப்பட்டுப்போய் அரை கணி ஆகிவிட்டது. அன்றைக்குக் கார்த்திகை விரதம். காலைப் பலகாரம் மூடிந்து, மத்தியானச் சாப்பாட்டை டி.பன்பாக்ஸில் கட்டிக்கொண்டு சென்றுவிட்டாள். இனிமேல் அவள் திரும்பிவர, பொழுது பட்டுவிடும். பட்டணத்தில் டவுன் வஸ் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறதே! அவள் தந்தை நல்லதிசையுடன் இருந்து, நல்ல ஆயுளும் பெற்றிருந்தால் அவளுக்கு இந்தக் கஷ்ட நஷ்டம் ஏன் ஏற்படப்போகிறது? தொடக்கத்தில் அவள் கான்வெண் இக்கும் காலேஜூக்கும் போய்வந்த அம்பாஸிடர் வண்டியே இருந்திருக்குமே! மரசதத்தம்மைக்கு துயரம் முட்டிக்கொண்டு வந் தது. வெள்ளே ரவிக்கையின் முதுகுப்புறம் நனைந்தது. ஜன்னலை நெருங்கினுள். மென்மையான உஷ்ணம் கலந்த இளங்காற்று நெருங்கி வந்தது. இன்னும் கொஞ்சநாள் போய்விட்டால் அனல்காற்று வீச ஆரம்பித்துவிடும். பத் திரிகைகளுக்குக் கட்டம் கட்டி வெளியிட செய்தியும் கிடைத்துவிடும். - அவள் தலையை மீண்டும் உயர்த்தினுள். சுவரை ஒட்டி ஓடியது பார்வை. மீண்டும் குணசீலன் படத்தில் தகை புரிந்துகொண்டிருந்தார். இரட்டை நாடி உருவம்: அழகும் கம்பீரமும் இணைந்த முகவிலாஸம்: ஆனந்தமய மான சிரிப்பு, அந்தக் சிரிப்புக் கென்று ஒரு தனி அழகு ஒட்டும் படாமலும் இருந்த மெல்லிய மீசையின் அமைப்பே ஒரு திணி *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/71&oldid=1277337" இலிருந்து மீள்விக்கப்பட்டது