பக்கம்:நித்தியமல்லி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


அருகில் தமிழரசி சின்னப் பாப்பவாகக் காட்சி தத் தாள், புகைப்படத்தில்! அவளுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. குணசீலன் அவளே அண்டிவந்து நளினமான குறும் பு செய்தபடி, மரகதம்! உனக்கு இனி அதிகப் பொறுப்பு வந்தாச்சு, எப்போதுமே என்னை நீ நம்பக்கூடாது! ஆகச்சே உன் மகளுக்கு அவள் இஷ்டப்படி படிப்பையும் கல்யாணத்தையும் நடத்திப்பிடு. அவள் திருமணத்தைப் பத்தி முடிவு செய்யவேண்டிய பொறுப்பு உனக்குத் தான் ரொம்பஇருக்கு. இதை நீயும் மறந்திடப்படாது: பெண்ணும் மறந்திடாமல் இருக்க ஏற்பாடு செய். நான் இருந்தால், அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்குவேன். இப்போ நான் இப்படிச் சொல்றதை நீ ஒன்றும் பெரிசு படுத்திக்கக் கூடாது. நாம் எதுக்கும் எப்பவும் தியாராக கமனத்திடத்தோடே இருக்கவேணும். என் ஜாதகம் சகட யோக ஜாதகம்! சுகமும் கஷ்டமும் எனக்கும் பழகிப் போச்சு. நீயும் அப்படி இருக்கிறதுக்குப் பழகிக்கிட வேணும்' என்று வேதாந்தம் பேசி, அந்தப் பேச்சை மறைப்பதற்கு அல்லது மறப்பதற்கு ஒரு பெரிய சிரிப்பை சிரித்து வைத்தார். தமிழரசி புஷ்பவதியான சடங்கு நடந்தேறிய காலை யிலும் இதே பேச்சை அப்படியே ஒப்புவித்தார் குண சீலன்-தம் ஆருயிர் மனையாட்டியிடம்! எவ்வளவு தீர்க்க தரிசனமான வாக்காக அமைந்து: விட்டது அந்தப் பேச்சின் வேதாந்தம்). 粥 亲 涤 கண்களைத் துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்த மரகதத்தம்மையோடு அவளது நினைவுகளும் நகர்ந்துவிட்டன. பூஜை அறைக்குள் வந்தவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/72&oldid=1277338" இலிருந்து மீள்விக்கப்பட்டது