பக்கம்:நித்தியமல்லி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

了盛 அகிலாண்டேஸ்வரியைக் கையெடுத்துக் கும்பிட்டாள். ாளன் மகளுக்கு நல்ல வாழ்வைக் கொடு. தாயே! என்று: தாய் நெஞ்சம் தண்டனிட்டு வணங்கியது; பிரார்த் .தித்தது. சோமநாதன் வந்துபோன விவரத்த்தை நினைத்துக் கொண்டாள். தானே நேரில்வத்து முடிவு சொல்வதாகக் குறிப்பிட்ட செய்தியை இப்போது எண்ணமிட்டாள். ஆனல் அவள் அன்று அவரிடம் தெரிவித்தமாதிரி, அவள் தன் மகளிடம் எதையும் கேட்கவில்லை. காரணம், அதற். குகந்த சுழல் வசமாகவும் வாய்ப்பாகவும் அமையாதது தான்! இந்த ஒரு வாரமாக ஏன் சுடர் இப்படி மெளனம் காத்து நிற்குது?’ என்ற ஐயம் அவளுள் படுத்தி வந்த ய்ாட்டை அவளல்லவா அறிவாள்? நான் எந்த முடிவை யும் நாளுக யாரிடமும் சொல்லவில்லையே? ஆனந்தரங் கத்தின் பிள்ளை உதயணன் பேரில் சுடருக்கு நேசம் இருக் கிறது என்பது உண்மைதான். தாயிடம் எதையுமே மறைத்துப் பழகாத மகள். அந்த அளவுக்கு எனக்குப் பெருமைதான். இதற்கு என் கண்டிப்பு மனமும் ஒரு காரணம்தான். அப்படித்தான் இருக்கவேண்டும். அவள் நன்ருக இருக்க வேண்டும். நல்லவிதமாகப் படித்தும் பட்டம் பெறவேண்டும்: நல்லஇடத்தில் வாழ்க்கைப்பட வேண்டுமென்பதுதானே என் லட்சியம்! உதயணனை' அவள் ஒருவேளை. சோமநாத் அண்ணுச்சியின் மகன் வரவால் ஏதேனும் சலனம் அடைந்திருப்பாளோ? இல்லை. என் மனசுதான் சலனப்பட்டுட்டதா? என்று தனக்குத். தானே சுயப்பிரக்ஞைச் சோதனைச் செய்துப்பார்த்தாள். அவளுக்கு இப்போது எல்லாமே ஒரே புதிராகவே தோன் ந்த் தொடங்கிவிட்டது. மெளனத்தின் தலைநோவுடன் அமிர்தாஞ்சனச் சீசாவுடன் நகர்ந்து நடையில் வந்து உட்கார்ந்தாள். “. . . . . ."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/73&oldid=786649" இலிருந்து மீள்விக்கப்பட்டது