பக்கம்:நித்தியமல்லி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


மணி பத்தரை! காலப்புள்ளுக்குத்தான் எத்தனை அவசரம்! ஸ்டுவில் இருந்த ஸ்டேட்பாங்கின் லேவிங்க்ஸ் அக்கவுண்டின் பாஸ் புத்தகத்தை எடுத்தாள். தன் பெய னில் இருந்த இருப்புத் தொகைப் புள்ளியில் அவள் பார்வை நிலைத்தது. இருப்பில் பதினையாயிரத்து சொச் சம் இருந்தது. அவர் காலமானபின் ஆருயிரம் கரைந்து விட்டதே!... எதிர்காலச் செலவினங்களில் அவள் மனம் கவலைகொண்டது. வருமானம் என்று ஒன்று இல்லாவிட் டால் எவ்வளவு கட்டு செட்டாக இருந்தாலும், என்ன ஆகும்? வரவேண்டிய இனத்தில் இன்னும் ஒராயிரம் தேறினல் கடுக... கள்ளநோட்டாக நூறு ரூபாய்த்தாளே செலுத்திச் சென்ற அயோக்கியன் யாரென்று அவள் கண் டாள்? அவரவர்கள் சமூகத்துரோகிகளாக மாறும்போது அரசு என்ன செய்யமுடியும்? கள்ளன் பெரிதா, காப்போன் பெரிதா என்று ஜனநாயக யுகத்தில் சவால் விட வாய்க்குமா என்ன? - எல். ஐ. விக்கு தன் மகளின் rேமநலத்தை உத் தேசித்து கட்டிவந்த பிரிமியத்தை அன்று கட்டிவர வேண்டும் என்று ஏற்பாடு. ஜார்ஜ் டவுன் பாங்குக்குப் போய் அப்படியே மவுண்ட்ரோடு சென்று திரும்பியாக வேண்டும். ஒரே வேலையாக மாம்பவத்துக்கும் போய்வா திட்டமிட்டிருந்தாள். எவ்வளவு ஜோலிகள்!... அந்த நாளில் இருந்தமாதிரி கார் இருந்தால் எவ்வளவு உதவி யாக இருக்கும்? . . . . - தன்னுடைய பரணி நட்சத்திரம் ஒரு காலத்தில் தரணி ஆண்ட கனவு-நடப்பு அப்போது அவளுக்குக்" கதையாகத் தோன்றியது! மேடும் பள்ளமும் நிறைந்தது . வாழ்க்கை! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/74&oldid=1277339" இலிருந்து மீள்விக்கப்பட்டது