பக்கம்:நித்தியமல்லி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

. ஆனந்தரங்கத்தின் பரிசுத்தந்தப்பெட்டி அவள் கண் களே உறுத்தியது. பெட்டியைத் திறந்தாள். வைர நெக் லசும் கடிதமும் தென்பட்டன. கடிதத்தைப் பிரித்தாள். ஆயிரத்தெட்டாவது தடவையாகப் படித்தாள். கடிதத்தை பார்த்த அதே இரவு எட்டு மணிக்கே அவள் எழுதி முடித்த அந்த முடிவின் சொற்கள் லேசாக மங்கி யிருந்தன. இந்த முடிவை என் சுடர் அறிந்தால்?-- இந்தப் புதுக்கேள்வி அவளுள் பூதாகாரமாக உருவெடுத் துச் சிரித்தது. இது என் சொந்தவிஷயம்! இது என் சொந்தமுடிவு'... அவள் தனக்குத்தானே முன்னமேயே. தீர்மானப்படுத்திக்கொண்டு விட்டவள்போன்று தலையை. உலுக்கிக் கொண்டாள். எழுந்தாள். . பையில் பர்சையும் செக் புத்தகத்தையும் பரிசையும் போட்டுக்கொண்டு, விபூதி மடலினின்றும் பழனி விபூதியை துளி எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு. புறப்படலாளுள் மரகதத்தம்மை. . வெள்ளைப் புடவை சரசரத்தது: 11. தனகோடி . . . திருவாளர் ஆனந்தரங்கத்தின் கம்பீரம் பொலிந்த பங்களாவின் முகப்பு வாசலில் அடியெடுத்து வைத்ததும் தன்னை வரவேற்க கம்பீரமாகக் குரைத்த ராஜபாளையம் நாயைக் கண்டதும். மரகத்தம்மைக்குப் பயம் குழத் தொடங்கியது. ஏற்கனவே அலைபாய்ந்து குழப்பிக் கிடந்த அவள் பேதை மனம் இப்போது அச்சத்தால் கலவரமடைந்தது. தலைவாசலில் விசிறி வாழைகளின் சிதையாத அழகு அற்புதமாகத் தென்பட்டன. உச்சி வெயிலை அணைந்ததால் காற்று சூடுபரவித் தவழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/75&oldid=1277340" இலிருந்து மீள்விக்கப்பட்டது