பக்கம்:நித்தியமல்லி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


காலம் "சடுகுடு ஆடியது. அப்போது மரகதம் வாலைக்குமரியாக இருந்தாள்' பிறந்த மண் தஞ்சை. மிஷன் ஆலமரத் தெருவில் ஆலமரம் இல்லை யென்ருலும், புனிதரின் மாதா கோயில் இருந்தது. அங்குதான் அவள் வீடு, மானம்புச் சாவடியின் பண்டைப் பெருமையுடன் தெரு அடக்கம் பூண்டு விளங்கியது. மரகதத்தின் தகப்பருைக்கு ஒரு வட்டிக்கடையில் கணக்குப்பிள்ளே வேலை. ஆனந்தரங்கம் எதிர்வீட்டில் இருந்தான். அவன்: தந்தை கோர்ட்டில் வேலைபார்த்தார். வாலிப வயது. எதிரெதிர் வீடுகளாக இருந்தமையால், ஆனந்த: ரங்கமும் மரகதமும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள அவர்களது வாடகைமனையின் ஜன்னல்கள் பெரிதும். உபகாரம் புரிந்தன. கண்ணும் கண்ணும் கலந்துபேசி விளையாடும். பொன்ஞான வாய்ப்பை அமைத்துக் கொடுக்கும் வல்லமை. பெற்ற இளம் பிராயமல்லவா அது ஆகவே, அவர்கள் இருவரும் எல்லாக் காதலர்களையும் போல கண்களால் பேசிப்பேசி மகிழ்ந்து, வாய்மூடி மெளனியராய்க். காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட காலத்தில் ஒருநாள், மரகதம் பள்ளி விட்டதும் சிவகெங்கைத் தோட்டத்துக்குப் போயிருந் தாள். மழைபிடித்துக் கொண்டது. இப்போதிருப்பது போல, அப்போது டவுன்பஸ் இல்லை. மாட்டு வண்டி தான் இருந்தது. வாலைக்குமரி மட்டும் பொழுது பட்ட தருணத்தில் ஒன்றியாக மாட்டு வண்டியில் போக முடியுமா? போனல்தான். அவள் தந்தை வண்டிச் சத்தத்தை சத்தம் காட்டாமல் எடுத்து நீட்டுவாரா? கையொடிய, கழுத்தொடிய, வரவு-பற்றுக்காலத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/79&oldid=1277344" இலிருந்து மீள்விக்கப்பட்டது