பக்கம்:நித்தியமல்லி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


பூக்களின் துல்லியமான - மாண்பு மிக்க-அதிசய நெடியை அனுபவித்தவளாக நடை தொடர்ந்து நடையை அடைந்தாள். அந்தப் பங்களாவுக்கு அடி யெடுத்து வைப்பது அதுவே முதல் தடவை என்பதை அவள் மறக்கவில்லை. தன் கைக்குக் கிட்டவேண்டிய பாக்கியங்கள் அனைத்தும் விரல்வழி வழிந்திட்ட தேகைக் கை நழுவிப் போன ஆருத் துயரமும் அவளுள் ஏற். பட்டது. அந்த ஏமாற்றம் அவளுள் ஒரு தோல்வி மனப்பான்மையை உண்டு பண்ணிச் சலசலக்க வைக்கவும் தப்பவில்லை. பத்தரைமணியிலிருந்து ஏற்பட்ட அ லை ச் சல் அவளுக்கு அயர்வைத் தந்திருந்தது. "நான் இங்கேயே இருக்கேன். நீங்க போய் தகவல் சொல்லுங்க!' என்ருள் மரகதம், அங்கு இருந்த குஷன் சோபாவில் பதட்டமற்று உட்கார்ந்தாள் அவள். வ ட் ட மே ைஜ யி ல் இருந்த பூக்கிண்ணங்களும் ரேடியோகிராமும் சுழல் விசிறிகளும் குழல் விளக்குகளும் அவள் சிந்தையைக் கவர்ந்தன: சுவர்களில் பூசப் பட்டிருந்த இளநீள டிஸ்டம்பர் அவள் பார்வைக்கு குளிர்ச்சியைத் தந்தது. வாலிபப் பருவத்தின் தலை வாசலில் கொண்டுநிறுத்தப்பட்ட ஒரு மனநிலையில் அவள் ஊசலாடினள். மேல் புறத்தில் அவள் கண்கள் அலைந்தன. ஆனந்தரங்கமும் அவர் துணைவி செங்கமல. வல்லியும் திருமணக்கோலத்தில் இருந்தார்கள். தன் வீட்டில் இருக்கும் தன் திருமணப் படத்தையும் அவள் நினைவு கூர்ந்தாள். திரும்பவும் ஆனந்தரங்கத்தின் கல்யாணப்படம் சிந்தையில் சுழன்றது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/78&oldid=1277343" இலிருந்து மீள்விக்கப்பட்டது