பக்கம்:நித்தியமல்லி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


மரகத்தம்மையின் பொறுமை கழன்றது. "கள்" ளேன்று கோபம் வந்தது. காவற்காரக் கிழவனை முறைத்துப் பார்த்தாள். அவனை எரித்து விடும் சாகஸ் அவளுக்குப் புரிந்திருந்தால்தானே? . 'கோபிச்சுக்கப்படாது!’ "ஆமா, நீ இந்தப் பங்களாவிலே யார்?" "நானுங்களா?. நான் வந்து. காவல்காரனுங்க!” "அவ்வளவுதானே? போய் உன் பெரிய எஜமான் கையிலே மரகதத்தம்மைன்னு ஒரு அம்மாள் வந்திருக் கிறதாய்ச் சொல்லும்!” காவல்காரன் ஒருவினடி திகைத்தான். "அடடே, நீங்கத்ான அவுக?. கோபிச்சுக்காதீங்க. வாங்க உள்ளாற! நீங்க வந்தா உடனே அழைச்சுச்கிட்டு வரச் சொல்லி ஐயா உத்தரவு போட்டு ஒரு வாரமாச்சுங் களே?' என்று சொல்லி, கேட்டைத் திறந்து விட்டான் கிழவன். 'ஐயாவுக்கு முடியாமல் இருக்கிற தாலே, ரொம்ப கண்டிசன இருக்கவேணும்னு மேலிடத் திலே உத்திரவு போட்டிருக்காங்க!. சரி. நீங்க வாங்க. பாவம், வெய்யலிலே நின்னிட்டீங்க!” காவல்காரக் கிழத்தைக் கண்டதும் குரைத்த நாய் கூட வாலைச் சுருட்டிக்கொண்டு நாய்கள் ஜாக்கிரதை' என்ற பலகையையே உறுத்துப் பார்த்துக்கொண் டிருந்தது. 'நாய்களே, ஜாக்கிரதை' என்று அது பொருள் கொண்டிருக்கலாமோ? . வாங்கம்மா' என்று சொல்லிய வண்ணம், வண்ணம் மண்டிய முகப்பு மண்டபத்தைக் கடந்து உள்ளே நடந்தான் கிழவன். அவளைத் தொடர்ந்த மரகதம் வாசலிருந்து பரவிமணத்த நித்திய மல்லிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/77&oldid=1277342" இலிருந்து மீள்விக்கப்பட்டது