பக்கம்:நித்தியமல்லி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


ஒருத்தி காதலையும் கனவையும் அடி நாளையிலே வளர்த்துக்கிட்டு ஏமாந்தது போதாதாம்மா?. சரி, சரி' நான் என் ராமாயணத்தைப் படிக்கிறேன். நீ கொஞ்ச மானும் சாப்பிடம்மா! நீ சாப்பிட்டால்தான் எனக்கும் சாப்பிட ஒப்பும். இண்ணிக்கிண்ணு ஸ்பெஷலாப் போட்ட காப்பி இந்தா' என்று கெஞ்சினுள். மகளது மென் கரங்களைப்பற்றி லோட்டாவைக் கொடுத்தாள். முத்துவளேகள் முத்துதிர குலுங்கி அடங்கின. சுடர் காப்பி அருந்தினுள், உதயணனுடன் காப்பி அருந்தியயோது, எது எப்படியானலும் சரி, எப்படியும் உதயணனயே மணக்கவேண்டும்' என்ற பிரதிக்ஞை மின்வெட்டி, அந்த முடிவில் மனப்பலம் எய்திய விந்தை இப்போது அவளுக்கு வெறும் மாயை போலப்பட்டது. "என் அம்மாவை உதயணனின் அப்பா ஏமாற்றியதைப் போல, இப்போது என்னை இந்த உதயணன் ஏமாற்ற மாட்டார் என்பது என்ன நிச்சயம்? பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் உலகத்தில் பாதிக்கப்பட்ட காதல் கனவுகள் கூடுதல் என்பதாக குறிப்பிடப்படவில்லையா?. ஆனல், உதயணனின் இது நான் வரைப்பட்ட நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அவர் எவ்வளவோ கண்ணியமானவராயும் நேர்மையானவராயும்தான் தோன்றுகிருர்!- ஆளுல் அம்மாவுக்கு ஆனந்தரங்கத்தின் பரிசை ஏற்க மறுத்ததிலிருந்து, அவரது கோரிக்கையும்அதாவது, என்ன உதயணனுக்கு மணம் முடித்து வைக்கக் கோரிக்கையையும்தான் அம்மா மறுக்கிருள் என்பதுதான் கூடகமாகத் தெரிகிறது. ஒருவேளை, இந் நிலைக்கு ஆதாரமாக பொருளாதார ஏற்ற இறக்கத்தைத் திான் அம்மா முதல் கணிப்பாகக் கருதுகிருளா? அல்லது, தன்னை வஞ்சித்த மனிதரின் வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற வைராக்கியத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/93&oldid=1277355" இலிருந்து மீள்விக்கப்பட்டது