பக்கம்:நித்தியமல்லி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


ಡಿಪಿ7ಿತ அவள் மறுக்கிருளா? எதை வைத்து ஆனந்த கரங்கத்தின் கடிதத்தின் அடியில் தன்னை மன்னிக்குமாறு எழுதியிருந்தாள்?... ஆனல். இன்று அந்திமாலையில் மெரின கடற்கரை மணல் வெளியில் சற்று நடந்து வந்த போது, சுடர், அப்பாவுக்கு உங்க வீட்டிலே சம்பந்தம் வைத்துக்கொள்ள ஒரே துடிப்பாக இருக்கிறது. என் நல்லதிர்ஷ்டந்தான் அவர் மனம் என் திசைக்கே திரும்பி பிருக்குது. நீ அம்மா பெண். ஆகச்சே, உன் அம்மா விடம் எப்படியும் நல்லமுடிவை எனக்குச் சாதகமாக வாங்கிடு!. உன் அம்மாவாக்கை நீ தேவ வாக்காகக் கருதுகிற பெண் ஆகையாலேதான் நான் இப்படிச் சொல்லுகிறேன்!...” என்று உதயணன் மன்ருடிய போது, ஆகட்டும், பார்க்கிறேன்!” என்று நான் பொது வான-மையமான ஒரு பதிலைச் சொல்லிவிட்டு வர வில்லையா?...' நினைவுகள் மலர்தொடுத்தன. ஆனல் அம்மலர்களில் இதயத்துக்கு இதம் அருளும் சுகந்தம் வரவில்லை. "என்னம்மா, ஒரேயடியாய் யோசனையிலே ஆழ்ந் திட்டே?” என்று சுடரைத் தூண்டினுள் தாய்க்காரி. தமிழ்ச்சுடர் தடுமாறினுள். இரம்மா, பூ ஜை அறைக்குப் போயிட்டுத் திரும்பிடுறேன்!” என்று தெரிவித்த கையோடு நகர்ந்த மரகத்தம்மை மீண்டபோது கையோடு ஒரு சிறிய பூப் பையைக் கொணர்ந்தாள். வலது கைவிரல் நுனியில் மறைத்தபடி விபூதித் துணுக்கைக் கொண்டுவந்து சுடரின் நெற்றியில் பூசினுள். "கார்த்திகை அல்லவா? வடபழனி ஆண்டவனைத் தரிசிச்சுவந்தேன்' என்ருள். பின்னர், பையைப் பிரித்தாள். இந்தாப் பாரம்மா, இந்த நகையை' என்று சொல்லி ஒர் அழகிய வெல்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/94&oldid=1277356" இலிருந்து மீள்விக்கப்பட்டது