எல்லாப் பொருளும் இதன் பால் உள 5 மணியரசர் அளித்த விடைகளையும் அங்குள்ள ஆசிரி யர்களிடம் கூறிக் கொண்டிருந்தார். அப்போது அங் குள்ள ஆசிரியர்களுள் ஒருவர் ஓவிய ஆசிரியர் ; வயதிலும் சிறிது முதிர்ந்தவர். ஆதலால் அவர் மிகவும் ரிமையோடு எதையாவது எப்போதும் கேட்டபடியே o எங்கள் ஆசிரியர் திருக்குறளின் பெருமை யைக் குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அத்த ஓவிய ஆசிரியர், "ஐயா புலவரே, நான் ஒன்று கேட்கின்றேன் ; சொல்லுங்கள் பார்ப்போம்,' என்று மிகவும் மிடுக்கோடு கேட்டார். மணியரசர் : ஐயா ஓவியரே அதைத் தயை செய்து தெரிவியுங்கள ;என்னுல் முடிந்தால் சொல்லு கிறேன். ஓவியர் : நம்முடைய நகராண்மைக் கழகத்தார் சென்னையிலே ஒவ்வொரு தெருவிலும் இருபுறமும் அமைத்துள்ள அந்த அருமையான சாக் கடையைக் குறித்து உங்கள் திருவள்ளுவர் ஏதாவது சொல்லி யிருந்தால் தெரிவியுங்கள். மணியரசர் : சாக்கடை குறித்துத் திருக்குறளில் மட்டுமன்று நாலடியார் என்னும் நூலிலிருந்தும் நான் எடுத்துக் காட்டுவேன். சாக்கடை என்பதற்கு அங்கணம் என்றும் பெயர். “அங்கணந்துள் உக்க அமிழ்தற்ருல் குறள் 720
- ஊரங்கண நீர் உரவுநீர்ச் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் ”
காலடியார் 175