பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் வாழ்க்கை 119 வாறு அவர்களிடம் பொருள் பெற்று-வாழ்வானே யாளுல் அந்த நாடு பெரிதும் செழித்து அந்த அரச னுக்கும் கோடிக்கணக்கான பொருளைத் தரும் என் பதைப் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு எடுத்துக் கூறியிருக்கின்ருர். மோசிகீரனர் என்பவர், மக்கள் வாழ்க்கை நெல் விளைவிஞலேயோ நீர் நிலைகளின் சிறப்பினலேயோ நன்னிலையை அடைந்து விடாது ; அரசனின் ஆட்சித் திறமையினலேதான் மக்கள் இன் புற்று வாழ்வர்” என் பதை அரசர் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும் என்பதை, . # # --- = = "r "கெல்லும் உயிரன்றே நீரும் உயிான்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் அதனுல் யானுயிரென்ப தறிகை வேல் மிகு தானே வேந்தற்குக் கடனே’’ என்னும் அரிய செய்யுளினுல் அரசர்க்கு உணர்த்தி யிருக்கின்ருர். குடபுலவியர்ை என்னும் புலவர் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்து அரசே, உண்டி கொடுத் தோர் உயிர் கொடுத்தவரே யாவர். உணவே மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அந்த உணவு உற்பத்திக்கு நில வளமும் நீர் வளமுமே இன்றியமை யாதவை. ஆதலால் நீ போர் செய்து அகன்ற நிலத் தைப் பெறுவதைவிட உன்னிடமுள்ள கரம்பு நிலங் களை யெல்லாம் வளமுடையனவாக ஆக்க வாய்ப்பு உள்ள இடங்களிலெல்லாம் நீர் நிலைகளை ஏற்படுத்தி அந்த நிலங்களை எல்லாம் வளமான நிலங்களாகச்