கமச்சிவாய முதலியாரும் கானும் so ஆதலால், அந்த உணவை எனக்கும் பிற புலவர்கட் கும் அந்த அம்மையார் பரிமாறினர்கள். நமச்சிவாய முதலியார் எங்களோடு உடனிருந்து உணவுகொள் ளும்போது இடையிடையே இருபொருள் படும்படி பேச்சுக்களைப் பேசி எங்களையெல்லாம் சிரிக்கவைத் தார். உதாரணமாக அங்கே அவருக்கு "இலை. ളുഃ' என்ருர், இங்கே உங்களுக்குக் குரங்குக் கறிதான் கிடைக்கும், பூனைக்கறி இல்லையே " என்று ஏக்கம் கொள்ளாதீர்கள் என்ருர். குரங்குக் கறி என்பது மரக்கறியையும் பூனைக் கறி என்பது மீன் முதலியவை களையும் குறிக்கும் என்பதை உணர்ந்த புலவர்கள் நகைத்தனர் இவ்விதம் நமது முதலியார் அவர்கள் அவரவர் உள் ளப் போக்குக்கு ஏற்ற வண்ணம் அவரவர்களோடு கலந்து உரையாடுவது வழக்கம். பெரிய புராணிகர் கள் வந்தால், கம்பராமாயணம், மகா பாரதம் முதலிய வைகளிலே பொதிந்துள்ள அரிய கருத்துக்களை எல்லாம் அவர்கள் வியக்கும்படி எடுத்துப் பேசுவார். வேங்கடசாமி நாட்டார், கார்மேகக் கோளுர் போன்ற புலவர்கள் வந்தால், சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களில் அவர்களோடு ஈடுபட்டு விடுவார். என்னைப்போன்ற இளைஞர்கள் வந்தால், எங்களுக்குக் கற்பிக்கும் வகையிலே, சிலர் நாகரீகம் என்பார்கள், அது தவறு நாகரிகம் என்றே சொல்லவேண்டும்; சின்னபின்னம் என்பார்கள் சின்ன பின்னம் என்றுதான் சொல்ல வேண்டும் என்றெல் லாம் எடுத்துச் சொல்லுவார் நமது முதலியார். பெரும்பாலும் தாம் பேசுவதைவிட மற்றவர் களிடமிருந்து ஏதாவது அரிய செய்திகளைத் தெரிந்து
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/59
Appearance