பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv தன்னலம் கருதாமல் பொதுகலம் கருதி உழைக்கும் தாளாண்மை மிக்க வேளாளர். இங்ங்னம் பேரறிவும் அநுபவமும் வாய்ந்த பெரியார் அவர்கள் பல்வேறு சமயங்களில் தம் பலதுறைப் பேரறிவும் சுடர்விட்டு ஒளிரும்படி எழுதிய அநுபவ கன்முத்துகளாகிய பதினைந்து சிறந்த கட்டுரைகளைக் கருத்துக்கினிய வண்ண மாலையாகத் தொகுத்துத் தமிழன்னைக்குச் சூட்டி மகிழ் 1 C30m,ιο. இக்கட்டுரைகளில் இலக்கியத் திறனுய்வாக & தவை சில. சமய நூல்களின் சாரமாக அமைந்தவை சில. பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைப்பவை சில. மறை மலையடிகளார், மணியரசர், பேராசிரியர் நமச்சிவாய முதலி யார், தமிழ்ப் பெரியார் திரு. வி. க. போன்ற தமிழ்நாட்டுத் தலைசிறந்த தமிழ்ப் பேரறிஞர்களுடன் பேராசிரியர் அவர்கள் பழகிய பழக்கத்தால் விளைந்த அநுபவ முத்துக்களாய் ஒளிர் வன சில. இளைஞர்கட்கும் பெற்ருேர்க்கும் கல்லறிவு ஊட்டு வன சில. இங்ங்னம் பல்வேறு வகைப்பட்ட அரிய கருத்துக் களே ஆசிரியர் அவர்கள் தமக்கே உரிய எளிய இனிய கடையில் உள்ளத்தைத் தொட்டு உணர்வைத் துாண்டக் கூடிய வகையில் எழுதியுள்ளார்கள். இக்கட்டுரைகள் அனைத்தும் இளைஞர் முதல் முதியோர் வரை அனைவரும் படித்துப் பயன் பெறக் கடடியனவாாகும். இத்தகைய மதிப்புயர்ந்த மணிகளாய் ஒளிரும் அழகிய கட்டுரைகளைத் தொகுத்து மாணவர் மன்ற வெளியீடாக வெளியிட அருள்கூர்ந்து இசைவு தந்த பேராசிரியர் அவர் கட்கு மன்றச் சார்பில் எங்கள் கன்றி கலந்த வணக்கத்தை அறிவித்துக் கொள்கின் ருேம். இளைஞர்கள் முதல் அனை வர்க்கும் கல்வழி கட்டும் இவ்விதுபவக் கட்டுரைகன்க், கற்றுத் தமிழுலகம் பயன் பெற வேண்டும் என்பது எங்கள். விருப்பம். வணக்கம். 17. இரத்தின முதலி ; இங்ங்னம், தெரு, சென்னை-1 #. 單 H - 轟