பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கித்திலக் கட்டுரைகள் யினை அடைந்தது. உடல் நலிவு காரணமாகப் படிப்பை நிறுத்திவிட்ட திரு வி. க. அவர்களைப் பெற். ருேர்கள் மீண்டும் பள்ளிக்கு அனுப்ப நினைத்தனர். ஆளுல் குடும்பச் சூழ்நிலை தடை விதித்து விட்டது. திரு வி. க. அவர்களின் அன்னை யாரும் தந்தையாரும் நோய் வாய்ப்பட்டுப் பாயில் படுத்தனர். பொருள் முடையால் திரு. வி. க. வின் தமையனரும் படிப்பை நிறுத்த நேர்ந்தது. இந்நிலையில் திரு வி. க. அவர் கள் கவனிப்பாரற்றுத் தம் மனம் போன வண்ணம் அலைந்து திரிந்தார். திரு வி. க. அவர்கள் தம் தமையனராய திரு. வி. உலகநாதர் இரண்டாண்டு மூத்தவர் எனினும் தம் இளவலைத் தமையன் போன்று நினைத்து அன்பு காட்டிய நிகழ்ச்சிகளை நான் கண்டு மகிழ்ந்திருக்கின் றேன். தமையனும் தம்பியும் அன்பில் ஒருவரையொரு வர் விஞ்சினர். தமையனர் ஓர் அச்சு நிலையத்தில் வேலைக்கமர்ந்தார். அவரால் குடும்பத்திற்குச் சிறிது. ஊதியம் கிடைத்தது. இடையில் கல்வியை நிறுத்த, நேர்ந்த திரு வி. க. அவர்கள் வெஸ்லி மிஷன் கல்லூரி யில் சேர்ந்து படிக்கத் துவங்கினர். அக்காலத்தில் மிகுந்த பேரும் புகழும் பெற்றிருந்த நா. கதிர்வேல் பிள்ளை அந்தக் கல்லூரியில் இருந்து கொண்டு எங்கள் இருவருக்கும் தமிழ்ப் பாடம் கற்பித்து வந்தார். பத்தாண்டுகள் கழித்துச் சிறுவர் சங்கத்தின் காரணமாக நாங்கள் இருவரும் நெருங்கிப் பழகலா னுேம் இந்தத் தொடர்பு காரணமாகத் தமிழ்ப் பெரியார் அவர்களை அவ்வப்போது கண்டு அளவளாவி