(MO கித்திலக் கட்டுரைகள் வல்லுநராகவும் திகழ்ந்தார். மணிக்கணக்கில் அவர் களுடன் கலந்து உரையாடுவது மிகுந்த இன்பம் பயந்து அறிவு விளக்கம் தருவதாய் அமையும். " எப்பொருள் எத்தன் மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு ’’ என்னும் குறள் தந்த இலக்கியமாகத் தமிழ்ப் பெரியார் அவர்கள் திகழ்ந்தார். பொதுவாகத் தலைவர்கள் ஏதே னும் ஒரு துறையில் மட்டும் புகழ் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனல் நம் திரு. வி. க. அவர்களோ பல துறைகளிலும் பேரும் புகழும் பெற்ருெளிர்ந்தார். முதன் முதலாக அரசியல் மேடைகளில் அழகுத் தமிழ் முழக்கம் செய்த பெருமைக்குரிய ஒரு சில தலைவர் களுள் நம் தமிழ்ப் பெரியார் தலையாயவர் ஆவார். வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த திரு. வி. க. அவர்கள் பதவியினின்றும் விலகி நாட்டு விடுதலைக்காக முழு நேரப் பணி புரிந்தனர் என் ருல் அவர் தம் உரிமை உணர்வுக்கு வேறு சான்று கூறவும் வேண்டுமோ ? தேசபக்தன் என்னும் இதழின் ஆசிரியராக அமர்ந்து தமிழ்ப்பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரைகள் மக்களிடையே பெருமளவிற்கு விடுதலை உணர்ச்சியினைத் துாண்டி விட்டன. சாது அச்சுக்கூடம் என்னும் அச்சு நிலையத்தினைத் தொழி லாளர் தம் பேராதரவுடன் பெரியார் அவர்கள் துவக்கி ர்ைகள். உடனே நவசக்தி என்னும் வார இதழினையும் வெளியிட்டனர். நவசக்தி இதழ்களில் திரு. வி. க. அவர்கள் எழுதிய தலையங்கங்களை இன்று படித்தாலும் மக்கள் வீறு கொண்டெழுவது உறுதியாகும்.
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/66
Appearance