குழந்தை உள்ளம் 83 படங்களாக நினைக்கும் போது புருவ மத்தியிலிருக் கின்றது உறங்கும்போது மூளையிலிருக்கின்றது ; அவ் விதமுள்ள ஒரு சக்தி என்று கூறலாம். அந்த உள்ளம் நன்ருக வளர்ந்த மனிதர்களிடத்தில் நமக்கு விளக்க மாகத் தெரியவில்லை. ஒருவன் தன்னிடமுள்ள கெட்ட குணங்களை முற்றிலும் மறைத்து கம் மிடம், மிகவும் நல்லவன் போல் நடிக்கலாம். ஆனுல் அக்குழந் தையோ அவ்விதம் செய்யாது. அதன் உள்ள ம், கள்ளம் கபடமற்றது. அதன் உள்ளத்தில் தோன்று பவைகளை யெல்லாம் அது தன் முகத்தில் தெரிவித்து விடும். அதன் முகந்தான் கண்ணுடிக்குச் சரியான உவமை. அதனை நாம் ஒரு நிமிட நேரத்தில் نیIP வைக்கலாம். அடுத்த நிமிடத்தில் அதனைச் சிரிக்க வைக்கலாம். அது தேம்பித் தேம்பி அழுவதையும், அழுத கண்ணிர் உலருவதற்குள் சிரிப்பதையும், சின் னஞ்சிறு செயல்களையெல்லாம் பார்த்துப் பார்த்து ஆச்சரியப் படுவதையும் நாம் அனைவரும் கண்டுகளிக் கின்ருேம். அந்த வயதில் அதை யார் விரும்பிலுைம் எடுத்துச் சீராட்டலாம் ; பாராட்டலாம். அதற்கு அவர் அயலார், இவர் உறவினர் என்பது இல்லை. அது யாரைக் கண்டாலும் சிரிக்கும். அதனிடம் பகைமைக் குணம் சிறிதும் இல்லை. வஞ்சனை, பொருமை, முதலிய குணங்களும் இல்லை. அதற்குப் பசுவும் சிங்கமும் ஒன்றே , கிளியும் பாம்பும் ஒன்றே ; அதற்கு அச்சம் சிறிதும் இல்லை. "அச்சமில்லை அச்சமில்லை’ என்று பாரதியார் பாடிய பாடல் அதற்கு வேண்டுவதே இல்லை வள்ளுவர் வகுத்துரைத்த நீதி நூல்களும் அதற்கு வேண்டுவதில்லை. அக்குழந்தை ஒரு வகையில் பெரிய
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/89
Appearance