உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H4 கித்திலக் கட்டுரைகள் ஞானி. அன்று, தெய்வப் பிறப்பு. தெய்வத்தையும் குழந்தையையும் ஒன்ருக வைத்துக் கொண்டாடுகிருர் கள் அல்லவா ? அத்தகைய துாய உள்ளம் வாய்ந்த குழந்தைகளின் உள்ளத்தைப் பாராட்டாதவர் யாவர் o அதன் வடிவைச் சித்திரிக்காத ஓவியக்காரனும் உளனே ? அதன் வடிவ அழகினையும் குண நலன்களை யும் புகழ்ந்து பர்டாத புலவனும் உண்டோ ? அத்தகைய குழந்தைகளாலேயே இவ்வுலகம் நடைபெறுமானல் - இவ்வுலகம் குழந்தை உலக மாகவே நிலவி விடுமானல், இங்கே வஞ்சனை, பொருமை, கோபம் முதலிய தீய ஒழுக்கங்களுக்கு இடன் உண்டோ ? உலக அமைதியைக் கெடுக்கவல்ல போர்க்குழப்பந்தான் உண்டோ ? திரு. வி. க. பெரியார் கூறும் பெண்மை அழகும் இயற்கையெழிலுமாகவே பொலிவுற்று உலகம் விளங்கும் அல்லவா ? அப்படி யானுல் இப்போது நாம் அனைவரும் குழந்தைகளாக ஆகிவிடலாமா ? ஆல்ை நம்மைச் சீராட்ட ஒரு தாய் வேண்டும் ; காப்பாற்ற ஒரு தந்தையும் வேண்டும். எல்லாம் வல்ல இறைவியும் இறைவனுமே தமக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து நம்மைக் காப் பாற்ற உடன்படுவதாக வைத்துக் கொள்வோம். அவ் விதம் உடன்பட்டாலும் அவர்கள் நம்மை மூன்றுமாதக் குழந்தைகட்கு மேல் வளர வொட்டாமல் தடுத்து வைக்கவேண்டும் இல்லையேல் குழந்தை வளர்ந்து குரங்காக முடிந்தது’ என்னும் பழமொழிக்குத் தான் நாம் ஆளாவோம். மறுபடியும் பொருமை வஞ்சனை எல்லாம் ஒன்றன்பின் ஒன்ருக வந்து நம்மைச் சூழ்ந்து கொள்ளும்.