பக்கம்:நித்திலவல்லி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

நித்திலவல்லி / முதல் பாகம்



அர்த்தப்படுத்திக் கொண்டு நீங்கள் கோபப்பட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? புலவர்கள், அறிவாளிகள் ஒன்று கூடும் இடம் ஆகையால் இந்த நகருக்குக் ‘கூடல்’ என்பதாகப் பெயர் சூட்டினார்கள். ‘கூடல்’ என்று சொல்வதில் நாணப்பட என்ன இருக்கிறது?' என்று அவள் மறுமொழி கூறிய போது, ஆத்திரத்திலும், பதற்றத்திலும் அவளது ஒரு சொல்லைத் தான் தவறாகப் புரிந்து கொண்டதற்காக வெட்கி நின்றான் இளையநம்பி. அழகன்பெருமாள் மாறனை ஒரு சிறிய உப வனக் காப்பாளன்தானே என்று தான் நினைத்திருந்த மதிப்பீட்டை மீறி அவன் இலக்கிய, இலக்கணங்களையும் தர்க்க நியாயங்களையும் பேசக் கேட்ட போது எவ்வளவு வியப்பை இளையநம்பி அடைந்தானோ, அவ்வளவு வியப்பை இப்போது இந்த விநாடியில் மதுரைமா நகரத்தின் இந்தக் கணிகை இரத்தினமாலையின் முன்பும் அடைந்தான் அவன். ஒரு கணிகையிடம் பேசும் அலட்சிய மனப்பான்மையோடு தன்னிடம் பேசிய அவனிடம், ஒரு பெரிய புலவரிடம் பேசும் மதிப்புடனும், மொழி நுணுக்கத்துடனும் அவள் பேசியிருப்பது புரிந்ததும், தன்னுடைய பதற்றத்துக்காக அவன் நாணினான். ஆயினும் செம்பஞ்சுக் குழம்பு தீட்டி அலங்கரித்த கைகளைத் தன் முன் ஏன் அவள் காண்பிக்கிறாள் என்பது இன்னும் இளைய நம்பிக்கு விளங்கவில்லை.

அந்த நிலையில் அழகன்பெருமாளோ விலகி நின்று சிரித்துக் கொண்டிருந்தான். நளினத் தாமரைப் பூக்களைப் போன்ற அவளுடைய அழகிய உள்ளங்கைகளில் கோடுகளாகவும், ஒவியங்களாகவும் மிக அழகிய முறையில் தீட்டியிருந்தான் குறளன்.

அந்தக் கைகளின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவையாயிருந்தன அவை. அவள் ஏன் தன் முன்பு கைகளை விரித்துக் காட்டுகிறாள் என்று புரியாத நிலையில் எதிரே குறும்பு தோன்றச் சிரித்துக் கொண்டு நின்ற அழகன் பெருமாள் மாறனின் மேல் மீண்டும் திரும்பியது இளையநம்பியின் சினம். சந்தனம் அரைக்கும் பகுதிக்குத் தனியே அழைத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/107&oldid=945349" இலிருந்து மீள்விக்கப்பட்டது