பக்கம்:நித்திலவல்லி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

நித்திலவல்லி / முதல் பாகம்


பிறந்திருக்கிறார்கள் என்று உங்களுக்கு யாராவது சொல்லியிருந்தார்களா, என்ன?”

“அப்படியில்லை! கையில் விளக்குள்ளவர்கள் வழி காட்டாவிட்டால் வேறு யார்தான் வழிகாட்டப் போகிறார்கள்?”

‘'சாதுரியமான பேச்சு!”

‘'சாதுரியம் யாருடைய பேச்சில் அதிகமென்றுதான் புரியவில்லை. இந்த விநாடி என்னுடைய வினாவுக்கு நீ பதில் சொல்லாததுதான் மிகப் பெரிய சாதுரியம் பெண்ணே!”

“.......?”

மறுபடி அவள் சிரித்தாள். மெளனமானாள். அவன் சினத்தோடு தொடங்கினான்:

“உரையாடல் என்பது எதிரே நிற்பவரும் கலந்து கொள்ள வேண்டியது. சொல்லுக்கு ஒரு நாகரிகம் உண்டு. நாகரிகமுள்ள எல்லார்க்கும் அது தெரிந்திருக்க வேண்டும்.”

“ஐயா! நீர் பெரிய வம்புக்காரராக இருக்கிறீர். பேசினால் கேட்கக்கூடாததைக் கேட்டு மெளனமாக்குகிறீர். மெளனமாயிருந்தால் பேசச் சொல்லி வற்புறுத்துகிறீர். இனிமேல் நாகரிகத்துக்கு உம்மைக் கொண்டுதான் புது இலக்கணமே எழுதுவிக்க வேண்டும் போலிருக்கிறது.”--

சற்றே கோபத்துடன் அவள் இதைச் சொல்லியது போல் இளையநம்பிக்குத் தோன்றவே, ‘இவளோடு நயமாக இன்னும் பேச்சு வளர்த்து உண்மையை அறிவது’ என்று கருதி மேலும் அவளோடு உரையாடத் தொடங்கினான். அவன் வினாவியவர்களில் ஒருவர்கூட, ‘மதுராபதி வித்தகர் இருக்கு மிடம் எனக்குத் தெரியாதே'--என்று மறுமொழி கூறவில்லை. தெரிந்து கொண்டிருந்தும் தன்னிடம் அவர்கள் ஏன் மறைக்கிறார்கள் என்பதுதான் அவனுக்கு விளங்கவில்லை.

‘கேட்கக் கூடாததைக் கேட்டு மெளனமாக்குகிறீர்'-- என்று இவள் கூறுவதிலிருந்து இவளுக்கும் அந்த இடம் தெரியும் என்பதை அவன் அநுமானம் செய்ய முடிந்தது. சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/17&oldid=714878" இலிருந்து மீள்விக்கப்பட்டது