பக்கம்:நித்திலவல்லி.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


2. பிடி தளர்ந்தது

மழைக் காலத்து நள்ளிரவில் திருமால் குன்றத்து மலைக் குகையில் பெரியவர் வகுத்த திட்டங்கள் நிறைவேறின. அவர் கூறிய தந்திரமான யோசனையின் படியே காராளர் மதுரைநகர் சென்று களப்பிரர் கலியரசனையும், மாவலி முத்தரையரையும் நம்பச் செய்து, அவர்களுடைய முழு ஒப்பு தலுடன், ஆசியும் பெற்றுக் குடும்பத்தோடு தீர்த்த யாத்திரையைத் திவ்ய தேசப் பயணமாகத் தொடங்கி விட்டார். திருமோகூர்க் கொல்லன், குறளன் ஆகியோர் பணிகளும், மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தன.

நாடு உண்மையாகவே அமைதியடைந்து பாண்டியர்கள் ஒடுங்கிவிட்டார்கள் என்று களப்பிரர்களும், பூதபயங்கரப் படையும் நம்பி அயர்ந்திருந்த நேரம் அது, சந்தேகத்துக்கு இடமான பழைய அந்த அவிட்ட நாள் விழாவின் போது கோநகரத்தில் களப்பிரர்கள் எவ்வளவு பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தார்களோ அவ்வளவு எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இப்போது இல்லை. இனி நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது” என்ற அளவுகடந்த துணிவினால் அயர்ந்து போயிருந்தார்கள் அவர்கள். தென்னவன் மாறனும், காமமஞ்சரியும் கொல்லப்பட்டு விட்டதாலும், கோநகரில் சந்தேகத்துக்கு உரியவர்களாக அவர்களுக்குத் தோன்றிய அழகன் பெருமாள் முதலியவர்களை வெளியேற முடியாத காராக்கிருகத்தில் அடைத்து விட்டதாலும் கலியரசனே.

“மாவலி முத்தரையரே! இனிமேல் பாண்டியர்களைப் பற்றி மறந்து விடலாம். அந்த வமிசம் போன இடத்தில் புல் முளைத்துவிட்டது” -என்று அடிக்கடி சொல்லிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/389&oldid=946606" இலிருந்து மீள்விக்கப்பட்டது