பக்கம்:நித்திலவல்லி.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்



“ஐயா திருக்கானப்பேர் வீரரே! உங்கள் கேள்விக்குப் புன்னகையால் மட்டுமே நான் மறுமொழி கூறியதாக வருத்தப்பட்டுக் கொண்டீர்கள். இப்போது வார்த்தைகளாலும் மறுமொழி கூறுகிறேன். இதோ, கேட்டுக் கொள்ளுங்கள்.

“இந்த விறகுகள் மதுரையை எரிக்காது. ஆனால், களப்பிரர்களை எரித்து நிர்மூலமாக்கி விடும் என்பது என்னவோ சர்வ நிச்சயமானது.”

இப்படி அவள் பேசி முடித்த போது வியப்பில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அவளை நோக்கி அவன் புன்னகை புரிந்தான்.

ஒரு பெரும் போருக்கு வேண்டிய படைக்கலங்கள் விறகுக் கட்டுகள் மூலம் உள்ளே வந்திருப்பதை அவன் அறிந்த போது, அது அவள் சாதுரியமா அல்லது அதை அப்படி அனுப்பி வைத்தவர்கள் சாதுரியமா என்று உடனே அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த வியப்பிலிருந்து அவள் மீள்வதற்குள்ளேயே.

“என்னோடு வந்தால் இதைவிடப் பெரிய மற்றோர் அதிசயத்தையும் காட்ட முடியும்! கருணை கூர்ந்து தாங்கள் வந்தருள வேண்டும்” என்றாள் இரத்தினமாலை.

“எங்கே வர வேண்டும்?”

“கீழே நிலவறைக்கு” என்று கூறி நிலவறை வழியே நுழைவாயிலுக்கு அவனை அழைத்துச் சென்றாள் அவள்.


5. அணிவகுப்பு

ரத்தினமாலையைப் பின் தொடர்ந்து போன இளையநம்பி சந்தனம் அரைக்கும் பகுதிக்குச் சென்று நிலவறை வழிக்கான அடைப்புக் கல்லைத் திறந்த போது, உட்புறம் ஏற்கனவே ஒளி தெரிந்தது. உடனே இளையநம்பி இரத்தின

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/404&oldid=946622" இலிருந்து மீள்விக்கப்பட்டது