பக்கம்:நித்திலவல்லி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

யும் தேடித் தேடி இதை எழுத வேண்டியிருந்தது. இந்த ஆராய்ச்சிக்குப் பல பழைய, புதிய நூல்களை ஆழ்ந்து கருத்தூன்றிக் குறிப்புகளைச் சேகரிக்க நேர்ந்தது.

கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்ததாகத் தெரிகிறது.[1] இது தொடர்பான வேள்விக் குடிச் செப்பேட்டுப் பகுதி வருமாறு:-

"களபரனெனும் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடல் முளைத்த பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதிர் அவிரொளி விலகவீற்றிருந்து

வேலை சூழ்ந்த வியலிடத்துக்
கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச்
செங்கோல் ஒச்சிவெண்குடைநிழற்
றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப்
பிறர்பால் உரிமை திறவிதின் நீக்கித்
தன்பால் உரிமை நன்கனம் அமைத்த
மானம் போர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த
கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னவன்"

இனி இலக்கிய ஆதாரங்கள் வருமாறு:-

கானக் கடிசூழ்வடுகக்கரு நாடர் காவல்
மானப்படைமன்னன் வலிந்து நிலங்கொள்வானாய்
யானைக் குதிரைக் கருவிப்படை வீராதிண் டேர்
சேனைக் கடலுங் கொடுதென் திசைநோக்கி வந்தான்.
வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச்
சந்தப் பொதியில் தமிழ்நாடுடை மன்னன்வீரம்
சிந்திச் செருவென்று தன்ஆணை செலுத்தும் ஆற்றல்
கந்தப் பொழில்சூல் மதுராபுரி காவல்கொண்டான்.
(திருத்தொண்டர் புராணம் மூர்த்தி... 1,12)
  1. டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டிய வரலாறு-பக்கங்கள் - 33,34,35,36,37.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/6&oldid=945238" இலிருந்து மீள்விக்கப்பட்டது