பக்கம்:நித்திலவல்லி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

படைநான் குடன்று பஞ்சவன் துரந்து
மதுரை வவ்விய கருநடர் வேந்தன்
அருகர்ச் சார்ந்துநின்றரன்பணி யடைப்ப

(கல்லாடம் 56)

இந்த இலக்கிய ஆதாரங்களைத் தவிர,

பல்லவர் வரலாறு—டாக்டர் இராசமாணிக்கனார்
பாண்டிய வரலாறு—டி.வி. சதாசிவ பண்டாரத்தார்
South Indian inscriptions (Volumes)
Mahavamsam (Volumes)
History of India - V.A. Smith
Pandyan Kingdom - K.A.Neelakanda Sastry
சாஸ்னத் தமிழ்க்கவி சரிதம்—மு. ராகவையங்கார்
ஆராய்ச்சிக் கட்டுரைகள்—மு. ராகவையங்கார்
பரிபாடல்
புறநானூறு
கலித்தொகை
பெருந்தொகை
தமிழ் இலக்கிய வரலாறு I, II கே.எஸ்.எஸ். பிள்ளை

ஆகியவற்றிலிருந்து இதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இந்த ஆதாரங்களே முழுமையான கதையாகிவிடமுடியாது என்றாலும், முழுமையான கதைக்கு இந்த ஆதாரங்களும் இருக்க வேண்டியதாகிய அவசியம் உண்டு. கதை நிகழ்ந்த காலத்து மதுரை அடிமைப்பட்டுக் கிடந்த மதுரை. ஆகவே கதையின் பெரும் பகுதியில் மதுரையின் கோலாகலங்களை அதிகமாகச் சித்தரிக்க முடியாமல் போயிற்று. பாண்டியன் கடுங்கோனின் பெயர்க் காரணம் பற்றி இக்கதையில் வரும் நயமான கற்பனை இணைப்பைப் பல தமிழாசிரிய நண்பர்கள் பாராட்டினார்கள். இந்தக் கதையில் வரும் மதுராபதி வித்தகர் பாத்திரப் படைப்பை வாசகர்கள் பலர் அவ்வப்போது வியந்து எழுதினார்கள். வேறு சில வாசகர்கள் செல்வப் பூங்கோதை தான் மறக்க முடியாத கதாபாத்திரம் என்றார்கள். இன்னும் சிலர் இரத்தினமாலைதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/7&oldid=715913" இலிருந்து மீள்விக்கப்பட்டது