பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை தமிழ் நாடு அரசு தமிழ் வளர்ச்சி இயக்குநர் (டாக்டர். சிலம்பொலி சு. செல்லப்பன் எம்.ஏ, பி,டி., பி.எல்., பிஎச்.டி.) பேராசிரியர் டாக்டர். ந. சுப்புரெட்டியார் தம் வாழ்க்கை வரலாற்றை நினைவுக் குமிழிகள்’ என்னும் தலைப்பில் வரைந்துள்ளார்கள். முதல் தொகுதியாகிய இந்நூலில் அவர் பிறப்பு, பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகள், பள்ளி-கல்லூரிப் படிப்பு, துறையூர் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக அமர்த்தப் பெற்றமை ஆகிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. மற்றவை அடுத்த தொகுதிகளில் தொடரும். பேராசிரியர் ரெட்டியார் மூன்றாண்டுப் பருவம் நிரம்பும் முன்னர் தந்தையாரை இழந்தவர். எளிய குடும்பத்தில் வளர்ந்தவர்கள், என்றாலும் தன் கடின உழைப்பால் படிப்படி யாக முன்னேறி இன்று கல்வியுலகு பாராட்டுகின்ற உயர்ந்த நிலையில் திகழ்கின்றார்கள். தம் வாழ்க்கைப் பயணம்பற்றி அவருடைய மனம் அசை போட்டதன் விளைவே இந்நூல். நீர்ப் பரப்பில் மழை சிறு தூறலாக விழும்போது குமிழிகள் தோன்றுவதில்லை. பெருந்துளிகளாக விரைந்து விழும் போது மட்டுமே அழுத்த மிகுதியால் குமிழிகள் தோன்று கின்றன. பேராசிரியர் ரெட்டியாருடைய வாழ்க்கைப் பரப்பில், எண்ணத்தில் நிற்கின்ற அழுத்தமான நிகழ்ச்சிகள் மட்டுமே இங்குக் குமிழிகளாக உருப்பெற்றன. குமிழியை நோக்கும்போது அதனுள் நமது உருவத்தையும் காண முடியும். அதேபோல் இந்துாற் குமிழியைப் படிக்கும்போது