பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix பேராசிரியர் ரெட்டியாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளுடன் அந்த வயதில் நம்முடைய வாழ்வில் நடந்தவையும் நம் மனத்திற்குள் நிழலாடவே செய்யும். தங்கள் பெருமைகளைக் கூறிக் கொள்வதற்கு மட்டுமே வரலாறு எழுதுவாருண்டு; தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை மட்டுமே சொல்லி உலகம் தங்களைக் கண்டுகொள்ள வில்லையே என்னும் ஏக்கத்தைப் புலப்படுத்துவாரும் உண்டு. பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் உயர்வோ தாழ்வோ, நடந்ததை நடந்தவாறே ஒளிவு மறைவின்றி வெளியிட்டுள் ளார்கள். தம் இளமைப்பருவப் படிப்புபற்றிய செய்திகளை ஒவியப்படுத்துவதுபோல துல்லியமாகவும் அழகாகவும் சித்திரித்துள்ளார்கள், வெறும் நிகழ்ச்சிக் கோவையாக அமைந்துவிடாமல் ஒரு கட்டுரைக் களஞ்சியம்போன்று படிக்கப் படிக்க நிறைவேற்படுத்தும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. பேராசிரியர் தம் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே அடுக்கிச் செல்லவில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியைக் குறிக்கும்போதும் அது தொடர்பான பின்னணிகளுடன் அனைத்து விவரங்களையும் அழகு மிளிரும் சொல்லோவிய மாகத் திட்டிச் செல்கின்றார்கள். இந்நூலினைப் பேராசிரியர் சுப்புரெட்டியாரின் தன் வரலாறு என்பதை விட 1920, 1930 களில் தமிழ் நாட்டுச் சிற்றுார்களின் நிலை, மக்களின் வாழ்க்கை முறை, திண்ணைப் பள்ளிக் கூடங்களில் கல்வி கற்றுத் தந்த முறை, உயர்நிலைப் பள்ளி-கல்லூரிகளில் கல்வி நிலை போன்றவற்றையெல்லாம் படம் பிடித்துக் காட்டுகின்ற சமூக வரலாற்று விளக்க நூல் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஆசிரியரின் அன்னையார் பிறந்த ஊர் பெரகம்பி என்பதும், ஆசிரியரின் சொந்த ஊர் கோட்டாத்துர் என்ப தும் வெறும் செய்தியாக மட்டும் இடம்பெறவில்லை. அந்த ஊர்களுக்கே ஆசிரியர் நம்மை அழைத்துச் செல்கின்றார்கள்,