பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X அந்த ஊர்களில் வாழ்ந்தது போன்ற உணர்வுகளையும் தோற்றுவித்து விடுகின்றார்கள். திண்ணைப் பள்ளியில் நடைபெறும் சிறப்பான நிகழ்ச்சி களாகப் பிள்ளையார் சதுர்த்தி, சரசுவதி பூசை ஆகிய இரண்டைச் சொல்லலாம் என்பது ஆசிரியர் கூறவரும் செய்தி. ஆனால் ஆசிரியர் அந்தச் செய்தியைத் தெரிவிப்ப தோடு மட்டும் நில்லாது இவ்விரண்டு விழாக்களையும் ஏன் கொண்டாடுகின்றோம்? எவ்வாறு கொண்டாடுகின்றோம்? என முழு விவரங்களையும் தந்துவிடுகின்றார். இதேபோல் சிற்றுார்த் திருவிழாக்களாக கரக ஆட்ட விழா, கண்ணன் பிறப்பு, காமன் பண்டிகை போன்றவற்றைக் குறிப்பிட்டு அவற்றை விளக்குகின்றார்கள். கோலிகுண்டு, கிட்டிப்புள், பம்பரம், கார்த்திசுற்றுதல், பீச்சுக்குழல் ஆகிய சிறுவர் விளையாட்டுகளும் இதில் அழகாக இடம்பெறுகின்றன. பேராசிரியர் ரெட்டியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசியராகப் பணிபுரிந்தவர். அதில் பெற்ற பட்டறிவு கொண்டு தன் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பைப் பற்றிக் கூறும்போது இன்றைய கல்விமுறைகள், கற்பிக்கும் முறைகள் பற்றிய விளக்கங்களைச் சுவையாக எடுத்துச் சொல்லித் தாம் படித்தபோதிருந்த நிலையுடன் ஒப்பிட்டு அவற்றின் குறை நிறைகளை எடுத்துக் காட்டுகின்றார்கள். அவருக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களை நினைவுகூரும் வகையில் அவர்கள் சொல்லித் தந்த பாடங்களை நூலாசிரியர் நமக்குச் சொல்லித் தந்துவிடுகின்றார். அதனால் அறப்பளிசுரசதகம் *. குமரேச சதகம், விவேக சிந்தாமணி, நல்வழி, நன்னெறி போன்ற நூல்களிலிருந்து பல பாடல்களுக்கான விளக்கங் களைப் பெற்று மகிழ்கின்றோம். தமிழாசிரியர் குமார வீரய்யர் "கூட்டொருவரையும் வேண்டாக் கொற்றவt' எனும் கம்பராமாயணப் பாடலை