பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi அன்று இவருக்கு நடத்திய திறத்தைக் கூறி, இன்று நாமும் இப்பாடலின் பொருள் நயத்தை உணர்ந்து மகிழுமாறு செய் கின்றார்கள். கற்பிக்கும் முறையில் கற்பித்தால் கணக்குப் பாடத்தைவிட எளிதான பாடம் இல்லை எனலாம்' ஆசிரியர் சரிவர விளக்கும் திறனில்லாதவராகும்போதுதான் "கணக்கு பிணக்கு’ என்னும் மொழி தோன்றுகின்றது. கணக்கைப் பிணக்கின்றி நடத்தியதால் இவருடைய கணித ஆசிரியர் திரு. கே. இராமச்சந்திர அய்யர் இவர் உள்ளத்தில் குறிக்கோள் ஆசிரியராக நிரந்தர இடத்தைப் பெற்றுள்ளதை அறிய முடிகின்றது. அவருடைய கற்பிக்கும் ஆற்றலை இந் நூலாசிரியர் கூற்றாகவே அறிவது சிறப்பாம். வரலாற்று ஆசிரியர் கதை சொல்லுவது போல் ஆரம்ப கணிதத்திலுள்ள கணக்கின் சூழ்நிலையை உண்டாக்கி விடுவார். இலாப நட்டம், கூட்டுவட்டி, வட்டிக் கணக்கு, கூட்டு வாணிகம் இவற்றைக் கற்பிப்பது அற்புதமாக இருக்கும். வகுப்பறையில் இருப்பதை மறந்து அங்காடித் தெருவில் இருப்பது போன்ற சூழ்நிலையை உண்டாக்கிவிடுவார். நாங்களே முதல் போட்டுக் கூட்டு வாணிகம் நடத்துவது போலவும், கந்து வட்டிக் கந்தசாமிக் கடையில் வட்டிக்குக் கடன் வாங்குவது போலவும், காஃபிப் பொடிக் கடையில் காஃபித் துரளில் சிக்கிரித் துளைக் கலப்பது போலவும், சருக்கரை மூட்டைகள் போன்ற சரக்குகள் வண்டியில் வந்து இறங்குவது போலவும் உணர்ச்சியை எழுப்பி விடுவார்’’-இவ்வாறு கற்பிக்கும் செய்திகளை வாழ்க்கையுடன் இணைக்கும்போது கருத்துகள் மனத்தில் ஆழமாகப் பதியத்தானே செய்யும்! 'இன்று பெரும்பாலும் இலக்கணம் மாணாக்கர் காதில் புகாத உலக்கையாகவே இருக்கின்றது. மாணாக்கர் இலக் கணத்தைச் சிம்ம சொப்பனமாகக் கருதுகின்றனர். இதற்கு இலக்கணம் காரணமன்று; கற்பிக்கும் ஆசிரியர்களே இந்நிலைக்குக் காரணம். இலக்கணத்தை அநுபவ முறையில்