பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii இலக்கியப் பாடத்துடன் இணைத்துக் கற்பித்தால் மாணக்கர் கள் கட்டாயம் இலக்கணத்தை விரும்புவர். நல்ல முறையில் கற்பித்தால் ஏனைய பாடங்களைக் கற்பதுபோல் அதிக இன்பத்தையும் பெறுவர்” என்கின்றார் இந்நூலாசிரியர். இவருக்கு இனிமையாக இலக்கணம் சொல்லித் தந்த ஆசிரியரை நினைக்கும்போது எனக்கு இலக்கணம் போதித்த ஆசிரியரும் என் நினைவுக் குமிழியில் தோற்றமளிக்கின்றார். என்னுடைய தமிழாசிரியர் வேற்றுமை உருபுகள் பற்றிப் பாடம் நடத்தும்போது முதல் வேற்றுமை உருபு, இரண்டாம் வேற்றுமை உருபு இன்னின்ன என்று சொல்லி நடத்தமாட் டார். ஒருகதை சொல்வதுபோலத் தொடங்குவார். 'ஒரு மன்னன், ஒரு மைந்தனைப் பெறும் விருப்பினால் தனக்குரிய மதுரை மாநகரின் நீங்கி மாதவத்தோரது மதங்கி வனத்தில் மலரவனே! மலரவனே! என மாதவம் புரிந்தனன்” இதைச் சொல்லிப் பார்; இதில் எட்டு வேற்றுமைகளும் உள்ளன என்று விளக்குவார். ‘‘மன்னன் - முதல் வேற்றுமை, மைந்தனை - 'ஐ' இரண்டாம் வேற்றுமை உருபு: பெரும் விருப்பினால் - ஆல் மூன்றாம் வேற்றுமை உருபு: தனக்கு -‘கு’ நான்காம் வேற்றுமை உருபு; மதுரைமா நகரின்"இன் ஐந்தாம் வேற்றுமை உருபு; மாதவத்தோரது-"அது, ஆறாம் வேற்றுமை உருபு: மதங்கி வனத்தில் -இல் ஏழாம் வேற்றுமை உருபு; மலரவனே! மலரவனே! -இது எட்டாம் வேற்றுமையாகிய விளி வேற்றுமை - தெரிகிறதா?” என்பார். இவ்வாறு இலக்கணத்தைதச் சொல்லித் தந்தால் இலக்கணம் இனிப்பின் கொடுமுடியாக விளங்காதா? தம் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சொல்லிச் செல்லும் போது இலக்கியச் செய்திகளை இணைத்துச் சொல்வது இந் நூலாசிரியர்க்குக் கை வந்த கலையாக விளங்குகின்றது. சிற்றுாரில் ஆரம்பக் கல்வி கற்ற இவரையும், இவர் அண்ணன் மகன் கணபதியையும் இவர்களின் ஆசிரியர் வி. கே.