பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii அரங்கநாத அய்யர் அவர்களே முசிறிக்கு அழைத்துச் சென்று உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார் என்பதை நயமாக எழுது கின்றார். வசிட்டரிடம் கல்வி கற்ற இராம இலக்குமணர் களை விசுவாமித்திரர் வேள்வி காக்க அழைத்துச் சென்றார். இராம இலக்குமணர்கள் வசிட்டரிடம் பயிலாத சில அரிய வித்தைகளை இவரிடம் கற்றனர் என்பது இராமாயணம். பேராசிரியர் ரெட்டியாரையும், அவர் அண்ணன் மகனையும் அவர்களுடைய ஆசிரியா உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க முசிறிக்கு இட்டுச் சென்றது 'வசிட்டரே இராம இலக்குமணர்களைக் கூட்டிச் சென்று விசுவாமித்திரரிடம் விட்டது போன்று இருந்தது என எழுதி நயம் கூட்டுகின்றார். முதலில் புரியாதிருந்த ஒரு செய்தி பின்னர் புரிய வந்தது என்று கூறுமிடத்தில் 'இந்தப் புதிர் அப்போது பிரம்ம சூத்திரம் போல் இருந்தாலும் நாளடைவில் அஃது பாஷியம் போல் விளக்கம் அடையும் என்பதை என்னால் அப்போது அறியக் கூடவில்லை’ என எழுதுவதன் வாயிலாகச் சூத்திரம், பாஷியத்தின் இயல்பை நுண்மையாக விளக்குகின்றார். கல்லூரியில் படித்த காலத்தில் உணவு விடுதியில் தங்கி யிருந்தபோது பிட்சு' எனும் இளைஞன் ஒருவன் அங்குப் பணியாளாக இருந்தான். அவன் சலிப்பு ஏதுமின்றி விருப்புடன் இவர்கள் இட்ட வேலைகளையெல்லாம் செய்தான். அதனை இலக்கிய நடையில் அவன் 'பாரதியார் சித்திரிக்கும் கண்ணன்-என் சேவகனைப் போன்றே பணியாற்றினான் என்பார்! "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்னும் முழக்கம் எம்மருங்கும் கேட்டாலும் நாம் சில சாதாரணப் பிழை களைக் கூடக் களைவதில்லை. களைவதில் முயற்சி எடுத்துக் கொள்வதுமில்லை. அதனால் விளம்பரங்கள், அறிக்கைகள், வெளியீடுகள் இவை பிழை மலிந்த சருக்கங்களாகக் காணப்