பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

χίν பெறுவதை நாம் எம்மருங்கும் பார்க்கிறோம்' என்கின்றார். "பிழை மலிந்த சருக்கம்' என்னும் தொடராட்சி நயத்தைத் தந்தாலும் இந்நிலை கவலைக்குரியதன்றோ? இதனைப் போக்கவேண்டுவது தமிழர் கடனன்றோ! பேராசிரியர் ரெட்டியார் எப்போதுமே நகைச்சுவையாக உரையாடும் இயல்புடையவர். அவருடைய நகைச்சுவைப் பேச்சால் ஓயாது நகைத்த வண்ணமேயிருக்க வேண்டி யிருக்கும் என்பதை அவரிடம் உரையாடியோர் நன்கு உணர்வர். எழுத்திலும் அந்த நகைச்சுவை இழையோடுவதை நூல் முழுதும் காணமுடிகின்றது. அவர் சிறுபிள்ளையாகப் பாட்டி வீட்டில் வளர்ந்தபோது காலையில் பால்கறக்கும் போது முதலில் இவருடைய தம்ளரில்தான் கறந்துவிடுவார் களாம். சிறிது வெப்பத்துடன் உள்ள அந்தப் பசும்பாலை அப்படியே பருகுவாராம்! இதனை 'மகேசுவரப் பால் பூசை காலை ஆறு மணிக்குள் எனக்குத்தான் முதலில்’’ என நயமாக எழுதிச் செல்கின்றார். இவருடைய துணைவியாரின் ஊரான பொட்டணத்தில் நல்லப்ப ரெட்டியார் என்று ஒருவர். அவர் வீட்டுத் திண்ணையில் அவருடன் நம் நூலாசிரியர் பேசிக் கொண் டிருப்பது பழக்கம். திரு நல்லப்ப ரெட்டியார் பேச்சில் வல்லவர். உலகியலை நன்கறிந்தவர். அவரால் உலகியல் பற்றிய எவ்வளவோ செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது என்பதை 'இவர் திண்ணை ஒரு பி.டி. ஐ. (P.T.I.) அலுவலகம்போல் செயற்பட்டு வந்தது ' என்று நகைச்சுவை யாகக் குறிப்பிடுகின்றார். மற்றோர் இடத்தில் நூலின் தமிழ்நடை நன்றாக ஆற்றொழுக்காக அமையவில்லை; மேடு பள்ளங்களுள்ள சரளைச் சாலையில் நடப்பது போன்ற அநுபவத்தைத் தந்தது” என்பார். மேடு பள்ளங்களுள்ள சரளைச் சாலை',