பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV என்னும் சொல்லாட்சி பொருத்தமான உவமையாக அமைவ தோடு நடையைப்பற்றிய நகைப்பையும் உண்டாக்கி விடுகின்றது. இடையிடையே வரும் முதுமொழிகளும் நயவுரைகளும் நடைக்கு உயிரூட்டுகின்றன. குருடன் இராஜ விழி விழிப்பது போல', 'சானேற முழஞ் சறுக்கியது', 'தப்பித்தது தம்பிரான் புண்ணியம்’, பணம் பத்துவிதம் செய்யும்’ கூட்டத்தில் கோவிந்தா போடுகிற மாதிரி’, ‘குருவிக்குத் தகுந்த இராமேசுரம்’. * கல்யாணம் ப ண் ணி யு ம் பிரம்மச்சாரி, கடன் வாங்கியும் பட்டினி, பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது', 'கெடுமதி கண்ணுக்குத் தெரியாது', 'வினாச காலத்திற்கு விபரீத புத்தி’, ‘பூசாரியைப் பார்க்க முயல்வதைவிடச் சுவாமியைப் பார்ப்பது மேல்’, ‘பரம்பரை ஆண்டியோ பஞ்சத்தில் ஆண்டியோ போன்ற மொழிகளைத் தக்க இடங்களில் பொருத்தமாகக் கையாண்டு செய்திக்குச் சுவைகூட்டி நடைக்கு விறுவிறுப்பூட்டியுள்ளார் ஆசிரியர். புகழ்ப் பட்டப் படிப்பில் (பி.எஸ்சி. ஆனர்ஸ்) சேர இவர் மறைத்திரு ஜெரோம் டி.செளஸ். (முதல்வர்) அவர் களை அடிக்கடி நேரில் பார்த்துக் கெஞ்சினாராம். பத்து நாட்கள் தொடர்ந்து சென்று வந்ததை 'குழந்தைப் பேறு இல்லாத ஓர் இளம்பெண் அரச மரத்தைச் சுற்றி வழிபாடு செய்வதைப்போல் விடாமல் பாதிரியார் விடுதிக்குப் போவதும் வருவதுமாக இருந்தேன்' என்றெழுதுவார். அவருடைய ஆர்வத்தையும் அக்கறையையும் காட்ட இதை விடச் சிறந்த உவமை ஏது? "சாதி அமைப்பு ஒழிக்கப் பெறாதவரை நாட்டிற்குக் கதிமோட்சமே இல்லை என்பது இவர் கொள்கை. தந்தை பெரியாரின் அடிச்சுவட்டை ஓரளவு பற்றியவரல்லவா? பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்