பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii என்பது பாரதியின்கல்வித்திட்டம். இந்தத்திட்டம் வெற்றிகர மாக நிறைவேற வேண்டுமானால் தாய்மொழியிலேயே எல்லாப்பாடங்களையும் கற்பித்தல் வேண்டும். விலைப்பாலை விட முலைப்பால் நல்லதல்லவா? என்பன போன்று இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாக் கருத்துகளை இடையிடையே பொதித்து வைத்துள்ளார். இளமைப் பழக்கம் எப்போதும் நிலைக்கும் என்பர். இவர் கல்லூரியில் படித்த காலத்தே ஒரு குயர் தாள் ஒன்றரை அனாவுக்குக் கிடைக்கும். இத்தாள்களை 4. புல்ஸ்கேப் அளவில் வெட்டிக் கோப்புகளில் போடுவதற் கேற்பத் துளையிட்டு வைத்துக் கொள்வாராம், ஒரு நாளுக்குத் தேவையான தாள்களை வகுப்பிற்கு எடுத்துச் செல்லும் கோப்பில் கோத்துக் கொண்டு ஆசிரியர் கொடுக்கும் குறிப்புகளை தேதிபோட்டு எழுதும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தாராம். இந்தப் பழக்கம் இன்றும் இவரிடம் தொடர்கின்றது. அன்று (1934ல்) வாங்கிய துளையிடும் கருவி இன்றும் (1988ல்) அவரிடம் பயன்பட்டு வருவதைப் பெருமையுடன் எழுதிக் களிக்கின்றார். உரியவர்கள் படிக்க நேர்ந்தால் தம்மீது சினம் கொள்வார்களே என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் எதனையும் மறைக்காமல் தாம் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிடுகின்ற இயல்புடையவர் இவர். “என் தாய் மாமனுக்கு வாழ்க்கைப்பட்ட அம்மையாரும் சற்றுக் கடுமையானவர்கள். அவர்களின் சிரித்த முகத்தை நான் ஒருநாளும் பார்த்ததில்லை’ என் மாமன் மனைவி பற்றிக் கூறுவதும், “இராமநாதபிள்ளை, கரும்பலகையில் PᏉ P, V, --- = --- என்னும் வாய்ப்பாட்டை எழுதி T Tı விளக்கினார். அவருக்கு விளக்குவதற்கு வேண்டிய ஆங்கில