பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii அறிவு இல்லையா அல்லது அவர் விளக்கத்தைப் புரிந்து கொள்ளுவதற்கேற்ற ஆங்கில அறிவு என்னிடம் இல்லையா என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். நான் 'விளங்கவில்லையே’ என்றேன். மேடையிலிருந்து இறங்கி வந்து என் கன்னங்கன் வீங்குமளவுக்கு மாறி மாறி அறைந்தார். மீண்டும் மேடையேறி அதே பாடத்தையே படித்தார். சொல்வதையே சொல்லும் கிளிப்பிள்ளை யானாரேயன்றி வேறு விதமாக மாற்றிச் சொல்லும் திறமை அவரிடம் இல்லை என்பதை உணர்ந்தேன்' எனத் தனக்கு வேதியியலைக் கற்பித்த ஆசிரியர் பற்றிக் கூறுவதும் இதற்குச் சான்றுகளாம்! தலைமையாசிரியப் பணி கிடைத்தது என்பதோடு நூல் நிறைவுறுகின்றது. ஆசிரியப் பணி இவருடைய உள்ளம் கவர்ந்த பணி. "ஆசிரியர் பணி என்பது கீதாசிரியனின் பொறுப்பைப் போன்றது. அப்பணியுடன் ஒரு பொறுப்பும் இணைந்தே வருகின்றது. நாம் என்றும் அப்பணிக்கு நம்மைப் பொருத்தப்பட அமைத்துக் கொள்வதே அது' என்பது ஆசிரியப் பணி பற்றிய ஆசிரியர் கருத்து. ஆசிரியப் பணி ஏற்ற அவர் அதனைத் திறம்பட அனைவரும் போற்றும் வகையில் கடமையுணர்வுடன் செய்து வந்தார் என்பதை அனைவரும் நன்கு அறிவர். பேராசிரியர் ரெட்டியார் அவர்களிடம் காரைக்குடியில் அழகப்பர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் மாணவனாக இருக்கும் நற்பேறு எனக்குக் கிட்டியது. 1952-53இல் அவருடைய மாணவனாக இருந்தேன். '"நான் காரைக்குடி யில் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றியபோது ஓரிருவரைத் தவிர எல்லோருமே உற்சாகமாக வகுப்புகளைக் கையாண் டோம். அதிகமாக நூல்களைப் பயின்றோம்; அற்புத மாகக் கற்பித்தோம்’ என்னும் பேராசிரியர் ரெட்டியார் -B