பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழையமுறைக் கல்வி 101 அறஞ் செய விரும்பு ஊக்கமது கைவிடேல் தந்தை தாய்ப் பேண் . நன்றி மறவேல் சனி நீராடு என்பவை போன்றவை மாணாக்கர் அநுபவத்தை யொட்டி இருந்தாலும், ஒளவியம் பேசேல் அஃகம் சுருக்கேல் மன்று பறித்து உண்ணேல் தையல் சொல் கேளேல் துண்மை நுகரேல் மோகத்தை முனி என்பவை போன்றவற்றின் பொருளை அறிவது சிறுவர்களின் அறிவிற்கும் அநுபவத்திற்கும் அப்பாற் பட்டது. ஒளவையாரின் கொன்றை வேந்தனிலும் கூட. அன்னையும் பிதாவும் முன்அறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை தாயின் சிறந்த ஒரு கோயிலும் இல்லை என்பவை போன்றவற்றின் பொருள் சிறுவர்களின் அநுபவத்தை யொட்டி உள்ளது. ஆனால், சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு தேடாது அழிக்கின் பாடாய் முடியும் வானம் சுருங்கின் தானம் சுருங்கும் பீரம்பேணி பாரம் தாங்கும் என்பவற்றின் பொருள் விளங்குதல் அரிது,