பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - நினைவுக் குமிழிகள்-1 பெற்றது; படிப்பையும் எழுத்து முறையிலேயே கற்பித்தனர். எழுத்துகள் ஒன்று சேர்ந்து சொற்களாதலையும், சொற்கள் பல சேர்ந்து சொற்றொடர்களாகி ஒரு கருத்தை விளக்கு தலையும் கண்டு அவ்வாறே காரணகாரிய முறைப்படி (Logical method) எழுத்து, சொல், சொற்றொடர் என்ற முறையில் கற்பித்தல் நடைபெற்றது. ஆனால் திண்ணைப் பள்ளிக் கூடத்திலும் சற்று உளவியல் முறைகளைத் தழுவி திரு. கா. நமச்சிவாய முதலியாரால் எழுதப்பெற்ற முதல் ஐந்து வகுப்புகளுக்கான தமிழ்ப் பாடநூல்கள் புழக்கத்திற்கு வந்திருந்தன. நான் திண்ணைப் பள்ளியில் படித்த காலத் திலேயே இந்தப் பாடநூல்களைப் படிக்கும் வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. பெரகம்பிக்கு அருகிலுள்ள செட்டி குளம் என்ற ஊரில் பலசரக்குக் கடையில் இந்த நூல்கள் கிடைத்தன. சொற்களையும் சொற்றொடர்களையும் படிக்கத் தெரிந்ததும் ஆத்திகுடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, உலகநீதி போன்ற மூதுரை நூல்கள் படிப்படியாகக் கற்பிக்கப் பெற்றன. அடுத்து வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி, நீதி வெண்பா போன்ற நீதி நூல்கள் தற்பிக்கப் பெற்றன. திண்ணைப் பள்ளிகளிலும் செய்யுளைச் சொற் பொருள், பொழிப்புரை, கருத்துரை என்ற முறையில் ஆகிரியர் எடுத்துக் கூறுவது, அதை மாணாக்கர் கேட்டுக் கொண்டிருப்பது, முதல் நாள் கற்பித்தவற்றை மறு நாள் ஒப்புவிக்கச் செய்வது, அன்று கற்பித்தவற்றைத் 9ಅಹಿಲತ್ತ கூறச் செய்வது முதலியவை ந-ை முறையில் G,5೧raಿ பெற்ற முறைகளாக இருந்து வந்தன. மனப்பாடம் செய்யும் பழக்கம் எல்லா நிலைகளிலும் வற்புறுத்தப்பெற்றன. மூதுரைகளிலும் நீதி நூல்களிலும் சில கருத்துகள் சிறுவர் களின் அநுபவத்திற்கு அப்பாற்பட்டிருந்தன: குருவித் தலையில் பனங்காய் கட்டுவது போ ன் றி ரு ந் த து . ஆத்திகுடியில்,