பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழையமுறைக் கல்வி 99 கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளையும் கற்பித்தார். சுப்பராய உடையார் காலத்தில் கணக்கில் கணிசமாக ஒன்றும் கற்றதாக நினைவு இல்லை. அரங்கநாதய்யர் காலத் தில் எல்லாத் துறைகளிலும் கல்வியில் எனக்கு வேகமான வளர்ச்சி ஏற்பட்டது. இலாப-நஷ்டம், சாதாரண வட்டி, பிரி வினை, தள்ளுபடி, சராசரி போன்ற கணக்குகளையும் கற்றுக் கொண்டேன். பின்னம், தசம பின்னக் கணக்குகளையும் அரங்கநாத அய்யர் கற்றுக் கொடுத்தார். இவர் காலத்தில் தசம பின்ன அறிவு சரியாக ஏற்படவில்லை. துறையூர் உயர் நிலைத் தொடக்கப்பள்ளியில் சேர்ந்து எட்டள்வது படித்த எட்டு மாதக் காலத்தில்தான் தசம பின்னக் கணக்குகளைச் செய்வதிலும் கணிசமான அறிவு ஏற்பட்டது. இவ்வாறெல் லாம் கணக்குப் பாடத்தில் பெற்ற அறிவின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் கணிதத்தில் முதல்வ னாகத் திகழ முடிந்தது. இந்த நிலையில் இந்த நான்கு ஆசிரியர்கள் கற்பித்த முறைகளைப் பழையமுறைகள், புதிய முறைகள் என்றும் பிரித்துக் கொண்டு நினைவுகூர முடி கின்றது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பெற்ற பயிற்சி யாலும், பத்து ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றிய அநுபவத்தாலும் பல்லாண்டுகள் பல நிலை மாணாக்கர்கட்குக் கற்பித்த அநுபவத்தாலும் இவ்வாறு சிந்திக்க முடிகின்றது. சுருக்கமாகக் கூறினால் பழைய முறை களில் பாடங்களுக்கு முக்கியத்துவம் (Subject-centred) தரப் பெற்றிருந்தது, புதிய முறைகளில் பயிலும் குழந்தைக்கு (Child-centred) முக்கியத்துவம் தரப்பெறுகின்றது. என் கல்வியில் இந்த இரண்டு முறைகளும் இடம் பெற்றமையால் இவைபற்றி ஈண்டுச் சிந்திக்க முடிகின்றது. பழைய முறைகள் : ஆசிரியர்கள் பயிற்சி பெறாது கற் பித்த காலத்தில் முதலில் எழுதவும் படிக்கவும் கற்பிக்கப் பெற்றது; எழுத்தைக் கற்பித்த பிறகு படிப்பு கற்பிக்கப்