பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-12 12. பழையமுறைக் கல்வி காலத்தில் அதாவது நான் முதல் ஐந்து فيه 5 اه) வகுப்புகள் பயின்றவரை எனக்குக் கற்பித்தவர்கள் நால்வர். பெரகம்பியில் இலிங்கிசெட்டியார் என்ற திண்ணைப்பள்ளி ஆசிரியர்; பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெறாதவர். மரபு வழியாகக் கற்றுப் பழைய முறைகளில் கற்பிப்பவர். கோட்டாத்துரில் முதலில் கற்பித்தவர் வேலூர் வாத்தியார் என வழங்கப்பெறுபவராகிய சந்திரசேகரய்யர். இவர் Lower grade ஆசிரியர். பயிற்சி பெற்றிருந்தாலும் மரபு முறையில்தான் கற்பித்தவர். அடுத்து எனக்கு ஆசிரியர் களாக அமர்ந்தவர்கள் சுப்பராய உடையார், வி.கே. அரங்க காத அய்யர். இவர்கள் Higher grade ஆசிரியர்கள். அவர்கள் கற்பித்தமுறைகளையும் தரத்தையும் இப்போது நினைத்துப் பார்த்தால் சுப்பராய உடையார் எட்டாவது வரை படித்துப் பயிற்சி பெற்றவர் என்பதையும் அரங்கநாத அய்யர் பத்தாவது வரை படித்துப் பயிற்சி பெற்றவர் என்பதையும் ஊகித்து அறிய முடிகின்றது. இலிங்கிசெட்டியார் 1 முதல் 100 வரை எண்ணுவதையும் 1 முதல் 20 வரை உள்ள வாய்பாட்டையும் முறைவைப்பு’ முறையிலேயே கற்பித்துவிட்டார். விளையாட்டுப் போலவே சிறுவர்கள் இவற்றை நன்கு கற்றனர். எண்சுவடியையும், கற்பித்தார். தமிழ் ஆங்கில நாள், மாதம், ஆண்டு இவற்றின் பெயர்களையும் இவ்வாறே கற்பித்து மனப்பாடமாக்கி விட்டார். இவர் எண்களைக் கற்பித்தபின் கூட்டல்,கழித்தல் பெருக்கல், வகுத்தல் கணக்குகளையும் கற்பித்துவிட்டார். கோட்டாத்தூருக்கு வந்த பின் வேலூர் வாத்தியார் ரூபா அனா பைசா கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளையும் அதுபோலவே ஆங்கில அரசு ஆட்சியி லிருந்ததால் பவுன் ஷில்லிங் பென்ஸ் ஃபார்த்திங் கூட்டல்,