பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலூர் வாத்தியார் கற்பித்த முறை 97 பாடலாலும் அறிந்துள்ளீர்கள்' என்றும் நினைவுகூரச் செய்து எங்களை மகிழ்விப்பார். நெஞ்சை நெகிழ்விக்கும் இன்னொரு பாடல் : பாலின் நீர் தீயணுகப் பால்வெகுண்டு தீப்புகுந்து மேலுநீர் கண்டமையும் மேன்மைபோல்-நூலினெறி உற்றோர் இடுக்கண் உயிர்கொடுத்தும் மாற்றுவரே மற்றோர் புகல மதித்து" பாலும் நீரும் நண்பர்கள்; ஒன்றோடொன்று நன்றாகக் கலக்கும் தனமையன. நீருக்கும் நெருப்புக்கும் பகை. நீர் கலந்த பால் காய்ச்சப்படும்போது பாலில் உள்ள நீரைத் தீ அணுகிச் சுடுகின்றது. பால் பொங்கத் தொடங்குகின்றது. பொங்கி வழிந்து தீயை அணைக்கின்றது. சிறிது நீர் தெளிக் கப்பெற்றதும் பொங்குவது அடங்குகின்றது. 'தளதள’ என்று கொதிக்கின்றது; நீரும் பாலும் சேர்ந்து விளையாடுகின்றன. இங்குப் பாவின் துணையாகின்ற நீருக்கு ஆபத்து வருங்கால் பால் வெகுண்டு தன் உயிரைக் கொடுத்துத் தீயை அணைக் கின்றது. இது போலவே கற்றறிந்த பெரியோர்கள் தம்மை அடைந்தார்க்கு வரும் துன்பத்தைப் பிறர் இதுவே தகுதி என்று புகழ்ந்து சொல்லுமாறு மதித்துத் தம் உயிர் கொடுத்தும் அத்துன்பத்தை மாற்றுவார்கள். இவ்வாறு இறுதியடிகள் இரண்டிலும் குறிப்பிடப்பெற்றுள்ள உயர் கருத்தை முதலிரண்டடியி லுள்ள எடுத்துக்காட்டைக் கொண்டு தெளிவாக விளக்குவார் வேலூர் வாத்தியார். இவர் நீதி நூல் பாடல்களை மிக நன்றாகச் சிறுவர்கள் மனங் கவருமாறு கற்பிப்பர். 17. இந்நூல்-பக்கம். 94 18. நீ. வெ. 77 --7