பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நினைவுக் குமிழிகள்-1 எளிதாகப் புகட்டும் முறையில் உள்ளன. இதிலுள்ள பாடல்களையும் வேலூர் வாத்தியார் அருமையாகக் கற்பித் தார். முன்னர்க் கற்பித்த பாடல்களுடன் ஒப்பிட்டும் கற்பிப் பதுண்டு. ஒரு பாடல் : மென்மதுர வாக்கால் விரும்பும் சகம்; கடின வன்மொழியி னால்இகழும் மண்ணுலகம் - நன்மொழியை ஒதுகுயில் ஏது.அங்கு உதவியது? கர்த்தபந்தான் ஏது.அபரா தஞ்செய்தது? இன்று' " எப்போதும் இனிமையாகவே பேசவேண்டும் என்ற கருத்தை உவமைகளினால் விளக்குகின்றது இப்பாடல். ஒசையால் மென்மையுற்றும் பொருளால் இனித்தும் ஒருவர் வாயி னின்று வெளிப்படும் சொல்லை இவ்வுலகம் விரும்பி மகிழ் கின்றது. ஆனால் இதே உலகம் ஒசையால் வன்மையுற்றும் பொருளால் கைத்தும் ஒருவர் வாயினின்று வெளிப்படும் சொல்லை அருவறுத்துப் பேசுகின்றது. இந்த உண்மையை விளக்க நீதிவெண்பா ஆசிரியர் இரண்டு எடுத்துக்காட்டு களைத் தருகின்றார். மெல்லிய குரலாலான இனிய ஓசை யுடன் கூவும் குயில் என்ன கொடுத்துவிட்டது? (எதுவும் இல்லை). அருவருப்புடன் வல்லோசையை எழுப்பும் கழுதை (கர்த்தபம்) என்ன கெடுதியை (அபராதம்) விளை வித்தது? (எதுவும் இல்லை). ஆனால் குயிலை மட்டும் உலகம் விரும்புவது ஏன்? அதன் மெல்லிய இனிய ஓசை யாலன்றோ? கழுதை வல்லோசையைத் தருவதால் அஃது உலகிற்கு அருவருப்பை விளைவிக்கிறது. "இந்த உண்மையை இன்சொலால் அன்றி' என்று தொடங்கும் நன்னெறிப் 16. நீ. வெ. 4.