பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலூர் வாத்தியார் கற்பித்த முறை 95 களின் இப்பண்பை முற்கூறிய உவமையால் தெளிவாக்குவர். இந்தப் பாடலை அடிகளாரின் வழி நின்று என் உள்ளம் கவரும் வண்ணம் வேலூர் வாத்தியார் விளக்கினதை இன்றும் நினைவு கூர்ந்து மகிழ முடிகின்றது. மற்றுமொரு அருமையான பாடல் என் மனத்தில் குமிழியிடுகின்றது. கைம்மாறு கருதாமல் கற்றறிந்தோர். மெய்வருந்தி தம்மால் இயல் உதவி தாம்செய்வர்:-அம்மா! முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு விளைக்கும் வலியனதாம் மென்று. " என்பது பாடல். கற்றறிந்த பெரியோர்கள் பயன் கருதாமல் மெய்வருந்தித்தம்மால் இயன்ற உதவிகளைப் பிறர்க்குச் செய் வர். இது எதுபோல் உளது? கவிஞர் ஒர் அருமையான உவமை யால்-குறிப்பாகச் சிறுவர்கள் நன்கறிந்த உவமையால்-தெளி வாக விளக்குவர். உண்ணும உணவு வகைகளைச் சுவைப்பது நாக்கு. முறுக்கு, சீடை, தேன்குழல் போன்றவற்றை நாக்கு சுவைக்க முடியாது. ஆனால் அவற்றின்மீது நாக்கு தன் ஆசையை விடுவதில்லை. பற்கள் இதன் ஆசையை நிறை வேற்றுகின்றன. இத்தகைய வலிய பொருள்களை நன்கு மென்று நாவின் நடுவில் தள்ளுகின்றன. சீடை கரும்பு போன்றவற்றைச் சிரமப்பட்டு மெல்லுகின்றன. இப்படி மெல்லுவதால் தமக்கு ஒரு பயனும் இல்லை; நாவின் பொருட்டே மெல்லுகின்றன. இதனால் இவை கைம்மாறு கருதாமல் உதவும் பெரியோர்களை ஒக்கின்றன. இவ்வாறு கவிஞர் விளக்குவதை ஆசிரியர் தமக்கே உரிய தனிப்பட்ட முறையில் அற்புதமாக விளக்கிச் சிறுவர்களை மகிழ்விப்பர். "நீதி வெண்பா' என்ற பெயரில் அரிய நூல் ஒன்று உள்ளது. இயற்றிய ஆசிரியரின் பெயர் அறியக்கூடவில்லை. இதிலும் பல பாடல்கள் மாணாக்கர்கட்கு அரிதான நீதியை 15. நன்னெறி-27.