பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நினைவுக் குமிழிகள்-1 இன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம் வன்சொலால் என்றும் மகிழாதே-பொன்செய் அதிர் வளையாய்! பொங்காது அழற்கதிரால், தண்ணென் கதிர்வரவால் பொங்கும் கடல்,' இன்முகத்துடன் கூடிய இன்சொல்லைக் கேட்டு எவர் மனமும் மகிழும்; மாறுபட்ட முகத்துடன் வெளிப்படும் வன்சொல் எவரையும் மகிழ்விக்காது. எல்லாரும் அறிந்த இந்த உண்மையை முன்னிரண்டு அடிகள் நுவலும். கதிரவன் காய்தலால் கடல் பொங்கி எழாது; ஆனால் தண் மதி காய்தலால் அது பொங்கி எழும். இந்த உண்மையை உவமையாகக் கொண்டு முன்னிரண்டு அடிகளில் பொதிந் துள்ள உண்மையைச் சிறுவர்களின் மனத்தில் பசுமரத்தாணி போல் பதியுமாறு விளக்குவார் வேலூர் வாத்தியார். இன்னொரு பாடல் : பெரியவர் தம்நோய்போல் பிறர்நோய்கண்டு உள்ளம் எரியின் இழுதுஆவர் என்க;-தெரியிழாய்! மண்டு பிணியால் வருந்து பிறஉறுப்பைக் கண்டு கலுழுமே கண்..”* உடலில் எந்த உறுப்பில் நோய் தாக்கினாலும் அது படும் தொல்லைகண்டு கண் கலங்கும்; கண் நீர் பெருகும். இது சிறுவர்கள் நன்கு அறிந்த உண்மை. இஃது ஈற்றடி இரண்டில் பொதிந்துள்ளது. இதனை உ வ ைம ய க க் கொண்டு முன்னிரண்டு அடிகளில் நுவலப்படும் உண்மையை விளக்குவர் கவிஞர். பிறர்க்கு வரும் நோயைக் கண்டு பெரியவர்கள் தமக்கு வந்ததாகக் கருதி வருந்துவர்; தீயிற் பட்ட மெழுகுபோல் உருகி மனம் நெகிழ்வர். பெரியோர் 13. நன்னெறி-18, 14. ng-20,