பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலூர் வாத்தியார் கற்பித்த முறை 93 கோர்ட்டிலே ஜட்ஜி இருப்பதுவும் - வக்கீல் கொட்டி முழக்கிநின்று ஆடுவதும் கூட்டிலே கள்ளன் நடுங்குவதும் - இந்தக் கும்பி செயும்செயல் அல்லவோடோ' கவிஞர் இங்குக் குறிப்பிடும் கும்பி செயும் செயலும் மேற் பாடலின் வயிற்றின் கொடுமையும் ஒரு கருத்தையே தெரிவிப் பன.இப்பாடலின் கண்பொதிந்துள்ள உண்மை பிச்சைக்காரர் கட்கு முற்றிலும் பொருந்தும். திருப்பதியில் நடமாடும் பல நவீன பிச்சைக்காரர்கட்கு இது சிறிதும் பொருந்தாது. இ வ ர் க ளு ள் நூற்றுக் கணக்கானவர்கள் திருப்பதி கோவாப்பரேட்டிவ் வங்கியில் காப்பு நிதிக் கணக்கு” (Savings Account) @ @ # $ ([5 Li L @ 5 opóñ®Æ€år; வியந்தேன். பணத்தாசை யாரை வி ட் ட து? முற்றுந் துறந்த முனிவர்கள்’ என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட பணத்தில் புரள்வதைக் காணும்போது நம் மனதில் ஒரே குழப்பம். எங்கும் சொல்லும் செயலும் வடதுருவம் - தென் துருவம்போல் விலகி நிற்பதைக் காண்கின்றோம். நிற்க. வேலூர் வாத்தியாரின் கற்பித்தலுக்கு மீண்டும் வருகின்றேன். வீரசைவர் மரபைச் சேர்ந்தவராதலால் வீர சைவப் புலவர் சிவப்பிரகாச அடிகள் அருளிய கன்னெறி என்ற நூல்களிலுள்ள பாடல்களையும் மனப்பாடம் செய்யு மாறு வற்புறுத்துவர். இப்பாடல்கள் சிறந்த வாழ்க்கை நெறிகளை அநுபவ வாயிலாகக் காட்டுபவை. இங்கும் என் உள்ளத்தைக் கவர்ந்த இரண்டு பாடல்களைக் காட்டுவேன், ஒரு பாடல் : 12 கவிமணி : மலரும் மாலையும் - பிச்சைக்காரர் - கும்மாளம் - 7